மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி … மீண்டும் நான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” … வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செவ்வணக்கம் தோழர் சம்மனசு

2012 - 15 காலகட்டத்தில் நான் ராஜபாளையத்தில் இருந்தேன். அதற்கு முன்னர் வெகு சில கூட்டங்களில் தோழர் சம்மனசுவை சந்தித்திருந்தாலும் குறிப்பான அறிமுகம் நான் ராஜபாளையத்தில் இருந்த போது தான் கிடைத்தது. கம்யூனிசம் ஒரு கட்சி மட்டுமல்ல, அது உந்தாற்றல் ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் இருந்தவர் தோழர் சம்மனசு. தோழர் சம்மனசையும், தோழர் செல்வத்தையும் பார்க்கும் போது அவ்வளவு வியப்பாக இருக்கும். முதிய வயதிலும், உடல் நிலை இணக்கமாக இல்லாத போதும் அவர்கள் … செவ்வணக்கம் தோழர் சம்மனசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் மீண்டும் இந்தி .. .. ஏன்?

நேற்று உள்துறை அமைச்சர் அமித்சா - தான் இந்தியா எனும் பல்தேசிய நாட்டின், பலநூறு மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து - “இந்தி பேசாத மாநிலங்கள், தங்களின் இணைப்பு மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும். இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கும் நேரம் வந்து விட்டது” என்று பேசி இருக்கிறார். அவர் இவ்வாறு பேசக் கூடியவர் தான், ஏற்கனவே பலமுறை இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது, பாஜக அரசங்கத்தின் … மீண்டும் மீண்டும் இந்தி .. .. ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடியரசு தினத்தை புறக்கணிப்போம்

இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது. எதிர்வரும் ஜனவரி … குடியரசு தினத்தை புறக்கணிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியும் வக்கிர எண்ணமும்

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே தேனீர் விற்ற பட்டறிவு(!) (அனுபவம் என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல்) கொண்ட, தேர்தல் காலங்களில் வடை சுடுவதில் வல்லவரான மோடி பஞ்சாப் சென்றிருக்கிறார். பெரோஸ்பூரில் 42,750 கோடிக்கு வடை சுடுவதாக மன்னிக்கவும் 42,750 கோடிக்கு நலத்திட்ட அறிவிப்புகள் செய்வதாக திட்டமிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி தில்லியிலிருந்து விமானம் மூலமும் பின்னர் எழுவூர்தி மூலம் பெரோஸ்பூருக்கும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையினால் … மோடியும் வக்கிர எண்ணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போட்டுடைத்த சத்யபால் மாலிக், ஜெயரஞ்சன்

இவை ஒன்றும் புதிய செய்திகள் அல்ல. சொல்லப் போகும் இரண்டு செய்திகளுமே கிட்டத்தட்ட பொது உண்மைகளைப் போல, அனைவருக்கும் தெரிந்த ரகசியம் போல ஆகிவிட்ட செய்திகள் தாம். என்றாலும் அதற்கு அண்மை சான்றுகள் கிடைக்கும் போது, அதை எடுத்து வைக்கும் போது ஒரு நிறைவு கிடைக்குமே. அந்த நிறைவு (சரியாகச் சொன்னால் எதிர்மறை நிறைவு) இந்தச் செய்திகளிலும் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அதன் அரசியல் பிரிவான பாஜக வும் அந்தப்படியே. அதன் பிரதமரும் அமைச்சரும், … போட்டுடைத்த சத்யபால் மாலிக், ஜெயரஞ்சன்-ஐ படிப்பதைத் தொடரவும்.