பேசுதற்கு எளியதா பெண்ணியம்?    

பேசுதற்கு எளியதா பெண்ணியம்?     ஆண்கள் திருந்துவதற்கான சிறப்பு நாள் 2 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகள் சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் பெண்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? விளக்குகிறது இந்தக் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Is feminism easy to talk about? A special day for men to change Did you know that for 290,000 years, women have led society? This video explains. Discuss.. Share.. https://www.youtube.com/watch?v=sG33M3j_ni0

கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் ஒரு பெண்

இந்த சமூகம் மிக நீண்ட காலமாக ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களும் ஆணாதிக்கத்திலேயே வேர் பிடித்து நிற்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரில் சிலர் பெண்ணியம் எனும் சொல்லையே கேலிக்குறியதாக்க்கி, ஆணின் பலதார வேட்கைக்கு பெண்ணை ஆயத்தப்படுத்துவதே பெண்ணியத்தின் உள்ளீடு என விளம்பித் திரிகின்றனர். இந்தப் போக்கிலிருந்து சமூகத்தை திசை மாற்றுவது என்பது இடையறாதும், உறுதியோடும், சமரசமின்றியும் செய்யப்பட வேண்டியதாகும். அதற்கு இந்த … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?

தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர். பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும், இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன? இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார். தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை … தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் அந்த லூலூ?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு சம்பவம் நடந்த போது .. ..

முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண் என்றால் அவ்வளவு இழிவா?

அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களின் அந்தரங்கம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற … இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.