தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?

சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், … தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!

  ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்

  உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான்  என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும்  பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள். “தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான … மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் … தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொலைகார “டௌ” வே வெளியேறு

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !! போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை.. போபால் – காலம் கடந்த அநீதி அன்பார்ந்த உழைக்கும் மக்களே , போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க … கொலைகார “டௌ” வே வெளியேறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டம், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள தனியார் "மெட்ரிக்" பள்ளிகளின் கட்டணக் கொள்கைக்குக் கடிவாளம் போடப்போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கோவிந்தராசன் கமிட்டி, ஆரம்பப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ. 3500 வரையிலும், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5000 வரையிலும், உயர்நிலைப்பள்ளிகள் ரூ. 8000 வரையிலும், … சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!

அஜ்மல் கசாபுக்கு தூக்குத்தண்டனை - நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப் பரிவரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு - தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக்கொன்ற தீபக் என்ற பார்ப்பன ஜாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்குத்தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, … நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?

இந்தியாவின் வெறிபிடித்த ஆயுதக்குவிப்பின் பின்னே, அதன் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் மறைந்துள்ளன. நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்திய ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,47,344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, இது 8.13 சதவீதம் அதிகம். "பாதுகாப்பான எல்லைகள், பதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே தான் இராணுவச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார், நிதியமைச்சர். அனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச்செலவுகளை விட, பல மடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்திற்கு … இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.