35 ஆயிரம் புத்தகங்கள்

அண்மையில் சென்னை சென்றிருந்த போது பழங்காசு. சீனிவாசன் ஐயாவை சந்தித்திருந்தேன். அதுவரை, அவரின் சேகரிப்பில் அரிய நூல்கள் பல இருக்கின்றன என்பது தெரியும் என்றாலும், நேரில் பார்த்த போது பெருவியப்பாக இருந்தது. எத்தனையெத்தனை தலைப்புகளில், எவ்வளவு நூல்கள் .. .. ஒரு தனி மனிதரால் சாத்தியமா? என்பதைவிட அவரின் மன ஓட்டம், அதற்கு முழுமையாய் ஒத்துழைக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என யாராலும் வியக்காமல், நம்மிடம் இது போன்ற உத்வேகம் இல்லையே எனும் ஏக்கம் எழாமல் தவிர்க்கவே … 35 ஆயிரம் புத்தகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட … இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்

முன்குறிப்பு1: தமிழ் நாட்டின் வியாபம் ஊழல் என்று கூறத்தக்கதாக டி.என்.பி,எஸ்,சி முறைகேடுகள் இருக்கிறது. வெளிவந்திருப்பது ஒரு நுனி தான் என்பதில் உய்த்துணரும் திறன் கொண்ட யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. முறையாக விசாரிக்கப்பட்டால் கல்வி அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும், முதல்வர், ஆளுனர் உள்ளிட்ட மிகு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும், 2000 கோடிக்கு மேல் முறைகேடு என கணக்கிடப்பட்டிருப்பதையும், 400 க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி … டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்

சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.