கொலைகளின் நீர்த்த வடிவமே கைது

கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்

செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி

சில நாட்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடந்தது. இதில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொண்டன. மொத்த அலைக்கற்றை பயன்பாட்டு உரிமையில் 71 விழுக்காடு கலந்து கொண்ட நான்கு நிறுவனங்களும் பெற்றுக் கொண்டன. மீதமிருக்கும் அலவை எதிர்வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் ஏலம் கோரி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் 4.3 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்திருப்பதோ 1.5 லட்சம் கோடிகள் தான். கடந்த … இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

செய்தி: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. முகநூல் செய்தி செய்தியின் பின்னே: இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது. கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் … மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக

செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை … கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளதைச் சொன்னால் கைதா?

தீஸ்தா செதல்வாட், முகம்மது சுபைர் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது ஐ.நா வரை பேசு பொருளாகி இருக்கிறது. அறிவுத் துறையினர் தொடங்கி முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்து விட்டனர். அரசு வாய் திறக்கவில்லை. பதில் கூறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இது முதல் முறையும் அல்ல. ஆனந்த் டெல்தும்ப்டே தொடங்கி வரவரராவ் ஊடாக ஸ்டென்சாமி வரை கைது செய்திருக்கிறார்கள். வரவரராவ் பிணையில் வெளி வருவதற்கு தலை கீழாக நின்று … உள்ளதைச் சொன்னால் கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்

விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான … விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்

‘மே தின வாழ்த்துகள் தோழர்’ ஒரு சடங்கைப் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் சொற்றொடர். இது கொண்டாட்ட நாளல்ல. அன்னையர் தினம், ஒன்று விட்ட சித்தப்பா தினம் போல இது ஒரு ‘தினம்’ அல்ல. இனிப்பு, புது சட்டை எடுத்து பரிமாற்றிக் கொள்ளும் முதலாளித்துவ பண்டிகை அல்ல. மாறாக, எட்டு மணி நேர உழைப்பு எனும் மெய்யறிவை நம்மோடு, நாம் வாழும் சூழலோடு, நாம் ஆளப்படும் சூழலோடு பொருத்திப் பார்த்து, நம்மையும், உலகையும் மாற்றியமைக்கும் வழியில் … மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.