இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?

அண்மைக் காலங்களில் சாதிய மோதல்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதை செய்திகளில் காண்கிறோம். நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்டது, கழுகுமலை மாணவர்கள் மோதல், திசையன்விளை படுகொலை, வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்தது, திருத்தணி பள்ளியில் மலம் பூசியது என நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? முன்பு போல் கலவரங்கள் என்ற பெயரில் முன் திட்டமிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படவில்லை என்று அமைதி கொள்வதா? அல்லது மாணவர்கள் கூட இலக்காகி விடுகிறார்களே என்று வேதனை … இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் இடம் என்ன?

அதிமுக தோற்றத்தின் அரசியல், அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் துணை,  எம்ஜிஆரின் நாயக பிம்பம், ஜெயலலிதாவின் ஆதிக்கம்,  பாஜக, கொடநாடு, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கும் காணொளி https://youtu.be/Zm7Zc7wK63g

நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க

வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சொல்லுளி

சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை சிற்றிதழ்களின் காலம். குறிப்பாக இடதுசாரி இதழ்களின் காலம் என்று கூறலாம். இன்று அவ்வாறு இல்லை. ஆனால், அப்படி கூறுவதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இணையம் வந்ததும் பரவியதும் பெருங்காரணம். என்றாலும், அந்த சிற்றிதழ்களின் அடர்த்தி வெகுமக்களிடம் போய்ச் சேர்வில்லை என்பது முதன்மையான காரணம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன் முதல் கல்கண்டு, தேவி வரையிலான ஏராளமான இதழ்கள் வெகுமக்களை ஈர்த்தன. … சொல்லுளி-ஐ படிப்பதைத் தொடரவும்.

விசாரணை அறிக்கை: திமுக தொடங்கி வைக்குமா?

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை 2. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி அறிக்கை. இந்த இரண்டு அறிக்கைகளின் மீதும் சட்டமன்றத்திலும் வெளியிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற விசாரணை கமிசன்கள் மீது பெரிய மதிப்பு எதுவும் இருப்பதில்லை. காரணம், அவை நிகழ்வுகள் மீதான மக்களின் எதிர்ப்புணர்வு, அரசாங்கங்களின் மீதான எதிர்ப்புணர்வாக மாறிவிடாமல் ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்படுபவை. மட்டுமல்லாது அந்த … விசாரணை அறிக்கை: திமுக தொடங்கி வைக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” … வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

செய்தி: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. முகநூல் செய்தி செய்தியின் பின்னே: இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது. கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் … மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.