சொல்லுளி

சற்றேறக் குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை சிற்றிதழ்களின் காலம். குறிப்பாக இடதுசாரி இதழ்களின் காலம் என்று கூறலாம். இன்று அவ்வாறு இல்லை. ஆனால், அப்படி கூறுவதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இணையம் வந்ததும் பரவியதும் பெருங்காரணம். என்றாலும், அந்த சிற்றிதழ்களின் அடர்த்தி வெகுமக்களிடம் போய்ச் சேர்வில்லை என்பது முதன்மையான காரணம். கல்கி, குமுதம், ஆனந்த விகடன் முதல் கல்கண்டு, தேவி வரையிலான ஏராளமான இதழ்கள் வெகுமக்களை ஈர்த்தன. … சொல்லுளி-ஐ படிப்பதைத் தொடரவும்.