இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்

இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும்.

இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய சாதியமுறை இருக்காது. இது இன்றும் நிலவில் இருக்கிறது சௌதியில் ஒரு கஹ்தானி பெண்ணை ஓர் அஸ்மரி ஆண் திருமணம் செய்ய முடியாது. இதற்கு திருமணம் வரை செல்ல வேண்டியதில்லை. அஸ்மரி உயரலுவலராக இருக்கும் ஒரு நிறுவனத்தில் கஹ்தானி கீழ்நிலையில் இருந்து வேலை செய்வதற்கு மிகுந்த மனக்குறை கொள்வார். ஓரிரு மாதங்கள் வேலையில் நீடித்தாலே அதிகம். ஆனால் அவர்கள் இருவரும் தோளோடு தோள் உரச நின்று தொழுது கொள்வார்கள், ஒரே தட்டில் சேர்ந்து உண்பார்கள்.

இந்த மனோநிலையை தமிழ்நாட்டிலும் காண முடியும். ஃபக்கீர்கள் என்றொரு பிரிவு இருக்கிறது. இந்திய சுதந்திரப் போரில் விழிப்புணர்வு பாடல்களை பாடி மக்களுக்கு சுதந்திர தாகம் ஏற்படுத்தியவர்கள் இவர்கள். இவர்களுடைய முதன்மையான வேலை. அதிகாலையில் நோன்புக்காகவும், தொழுகைக்காகவும் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது. இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு தைரா எனப்படும் பறை போன்ற தோல் கருவியை இசைத்துக் கொண்டு தெருக்களில் பாடி வருவார்கள். இவர்களிடமிருந்து எவரும் பெண் எடுக்க மாட்டர்கள். கிட்டத்தட்ட பிச்சைக்காரர் போலவே நடத்துவார்கள். நாசுவர்கள் என்றொரு பிரிவு. முடி திருத்துவது, இறந்த உடல்களை குளிப்பாட்டுவது, விருத்த சேதனம் செய்வது, குழந்தைப்பேறு பார்ப்பது போன்றவை இவர்களது தொழில். இவர்கள் வீட்டிலும் யாரும் பெண் எடுப்பதில்லை. இவர்களையும் தமக்கு சமமாக யாரும் நடத்துவதில்லை.

மத போதகர்கள், தங்களை மத அறிஞர்கள் என்று கருதிக் கொள்வோர் தான் இத்தகைய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அண்மையில் இப்படியான ஓர் அறிஞர் ‘கடைசி நபி’ என்று கிண்டலாக கூறும் அளவுக்கு புகழ்(!) பெற்றவர். இஸ்லாமியப் புரட்சி என்று பலர் கூவித்திரியும் மாற்றங்களுக்கும், மூளைச் சலவைக்கும் இவரும் இவருடன் இருந்த கூட்டத்தாரும் பெரும்பங்கு வகித்தார்கள். கடைசியில் தன்னுடைய பாலியல் வேட்டையை நீண்ட காலம் மறைக்க முடியாததால் குட்டுடைபட்டு நிற்கிறார். இது போன்றவர்கள் தான் இஸ்லாமிய சமூகத்துக்கு ஃபத்வா வழங்கும் இடத்தில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கேடு.

கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார் இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி. இந்திய முஸ்லீம்கள் குறித்தும் அவர்களிடையே நிலவும் சாதிய முறை குறித்தும், அது இஸ்லாமிய மதவாதிகளால் புறக்கணிக்கப்படுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

19 thoughts on “இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்

 1. பக்கீர்கள் என்பது சாதி அல்ல
  அவர்கள் கொட்டு கொட்டும் தொழில் செயவதால் கௌரவம் பார்த்து பெண் எடுக்காமல் இருக்கலாம்
  மலம் அள்ளுபவர் வீட்டில் நீங்கள் பெண் கொடுப்பீர்களா??
  இஸ்லாத்தில் சாதி இல்லை
  சில பெயர் தாங்கிகள் வைத்து கொண்டால்..அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது

  முகநூலிலிருந்து
  https://www facebook com/thedal.virumpi/posts/pfbid02S3hgGekPZL3xwf2KfZkNjDTaQ9mXFttMoLmfnQ4h42kB4CdJt4SEPBzsCt6xq5kfl?comment_id=2893659127446815

 2. சாதியம் தீண்டாமை என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானம் ஆகும்.
  தனிச் சொத்துடைமை தான் சாதியம், தீண்டாமை நிலவுவதற்கு காரணம்.
  மதம் அதாவது இந்து மதம், இஸ்லாமிய மதம், கிருத்துவ மதம்
  சாதியம் தீண்டாமைக்கு காரணம் இல்லை. இந்து மதத்தால் தான் சாதியம் தீண்டாமை உருவானது என
  அம்பேத்கரியவாதிகள், பெரியாரிஸ்ட்கள் கூறுவது எதார்த்தம் இல்லை.
  இங்கு சில புதிய இடது சிந்தனையாளர்கள் இஸ்லாமியத்தில் சாதியம் தீண்டாமை இல்லை என்பர். ஆகவே இஸ்லாமியத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சேர்ந்தால் சாதிய இழிவுகள் நீங்கிவிடும் என பெரியார் கூறியதாக கூறுவர்.
  சாதியம் தீண்டாமை இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் சாதியம் தீண்டாமை நிலவுவதற்கான. இந்தியாவில் நிலவுவது போல் இல்லாமல் சற்று சிறு சிறு மாறுபாடுகளுடன் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது.
  இதற்கு காரணம் என்ன நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தான் என்கிறது மார்க்சியம்.
  உற்பத்தி முறையில் மாற்றம் வராமல்
  சாதியம் தீண்டாமை ஒழிந்து விடாது.
  அகமணமுறை ஒழிய கலப்பு திருமணம் செய்து கொண்டாலும் ஒழியாது.
  மதத்தை அகற்றுவதால் அல்லது மதம் மாறுவதால் சாதியம் தீண்டாமை ஒழியாது.

  முகநூலிலிருந்து
  https://www facebook com/thedal.virumpi/posts/pfbid02S3hgGekPZL3xwf2KfZkNjDTaQ9mXFttMoLmfnQ4h42kB4CdJt4SEPBzsCt6xq5kfl?comment_id=726743938427070

 3. ஒரு தரவும், ஆதாரமும் இல்லாமல்…கிறுக்குத்தனமா புத்தகம் எழுதுபவனுக கூடி போனானுக

  முகநூலிலிருந்து
  https://www facebook com/thedal.virumpi/posts/pfbid02S3hgGekPZL3xwf2KfZkNjDTaQ9mXFttMoLmfnQ4h42kB4CdJt4SEPBzsCt6xq5kfl?comment_id=2414423382029268

 4. நண்பர் ஜெய்லாணி ஷா,

  என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? நூலை பதிவிறக்கி படித்துப் பாருங்கள். ஏராளமான மேற்கோள்கள் அதில் காட்டப்பட்டிருக்கின்றன.

  கொட்டு கொட்டும் தொழில் செய்தால் அது இழிவானது என எண்ணுகிறீர்களே. அது தான் சாதிய மனோநிலை. கூடுதல் ஆதாரம் தந்ததற்கு நன்றி.

 5. ஓஹோ…பணம் இல்லனு தாழ்வா நினைப்பவனும்
  நான் கலெக்டர் மாப்ளனு உயர்வா நினைப்பவனும்….சாதிக்காரன் தானா

  இஸ்லாத்தில் சாதி உள்ளது என்று குர்ஆன் மூலம் ஆதாரம் காட்டுங்க

 6. நண்பர் ஜெய்லாணிஷா, ஆதாரம் காட்டினால் நேர்மையாக மீளாய்வு செய்வீர்களா? ஆம் என்றால் கூறுங்கள். தொடர்ந்து உரையாடுவோம்

 7. அதை தான் கேட்கிறேன்
  ஆதாரம் குடுங்க… அதுல உங்க அறியாமை காணாம போயிரும்

 8. உரையாடல் நடத்தும் முன்பே அறியாமை என்று முடிவுகட்டி விட்டீர்கள். இதில் என்ன நேர்மை இருக்கிறது?

 9. ஆதாரம் ஒரு முறை அல்ல, பல முறை கொடுக்கப்பட்டது தான். நீங்க நேர்மையா மீளாய்வு செய்யத் தயாராக இருக்கிறீர்களா என்பதை சொல்லுங்க பாஸ்.

 10. எனக்கு ஆதாரம் வரல
  வெட்டி பேச்சு வீண்

 11. ஆக என்ன சொன்னாலும் நேர்மையா இருப்பேன் என்று மட்டும் சொல்ல மாட்டீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர் தான் மதவாதம் என்பது. அப்படியே தொடருங்கள். நன்று

 12. என்னிடம் விசயம் இருக்கிறதா இல்லையா என்பது நான் வெளிப்படுத்திய பிறகல்லவா தெரியும். அதற்கு முன்பாகவே நீங்கள் ஏன் யூகம் செய்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்பது ஒன்று தான். நேர்மையாக இருப்பேன் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறேன். அதை மட்டும் சொல்லாமல் ஏதேதோ சொல்கிறீர்கள். நான் என்ன சொல்வது .. .. ..?

 13. நேர்மையாக இருப்பேன் என்று சொல்லுங்கள். அல்லது செல்லுங்கள். இதற்கு மேல் நேரத்தை வீணடிக்க முடியாது.

 14. ஒரு விபரமும் இல்லாம கிறுக்கி தள்ளிட்டு..
  நேர்மைய பத்தி பேசுரிங்களா ?? ஹா..ஹா
  நீங்க பகுத்தறிவு கூட்டமா?

 15. நேர்மையா இருப்பேன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியாத நீங்கள் தான் அல்லாவின் புனிதத்தை காக்க போராடுகிறீர்கள். அந்த அல்லா பாவம் தான். சென்று வாருங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s