தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் ஒரு விவாதம்

கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஸ்ஸலாமு வணக்கம்

முன் குறிப்பு: இது 2013ம் ஆண்டு குலாம் எனும் இஸ்லாமிய பரப்புரைப் பதிவருக்கும் எனக்கும் இடையே வணக்கம் எனும் சொல்லை முன்வைத்து நடந்த விவாதத்தின் ஒரு பகுதி. இன்று அவருடைய வலைப்பக்கத்தை அழித்து விட்டு சென்று விட்டார் என்றாலும், தற்போது வணக்கம் எனும் சொல்லை முன் வைத்து விவாதம் நடந்து வருவதால் இதை மீள்பதிவாக இடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒருவரது நிலைப்பாட்டின் அடிப்படையை கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான முடிவுகளுக்கே சென்று சேரக் கூடும். … அஸ்ஸலாமு வணக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்

கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை … கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவனத்தென்றலுக்கு மறுப்பு

     அண்மையில் சுவனத்தென்றல் வலைப்பக்கத்தை எதேச்சையாக பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் செங்கொடி.மல்டிப்பிளை தளத்தில் "காலம் காத்திருக்கிறது வாருங்கள் முஸ்லீம்களே" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பின்னூட்டமாக இடப்பட்ட தகவல்கள் எனப்புரிந்தது. அதாவது நண்பர் டென்தாரா சுவனத்தென்றல் தளத்திலிருந்து பெற்ற தகவல்களைத்தான் தனது பின்னூட்டமாக இட்டிருந்தார் என்பது புரிந்தது. எனவே அங்கு கீழ்காணும் பின்னூட்டத்தை இட்டேன்.   நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் … சுவனத்தென்றலுக்கு மறுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.