கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து

உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும்.

நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது

ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை. கடவுள் மற்றும் மத நம்பிக்கையற்ற வாழ்வும் சாத்தியப்படும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக, நினைவை உயர்த்துவது அல்லது விழிப்பை உண்டாக்குவது. இப்பேரண்டம் மற்றும் உயிர்களின் தோற்றம், வளர்ச்சி ஆகியனவற்றைப் பற்றியதாகும். டார்வினிய இயற்கைத் தேர்வின் மூலம் உண்டாகும் படிநிலை வளர்ச்சி, எல்லாவகை உயிர்களும் வடிவமைக்கப்பட்டன போல கச்சிதமாக விளங்குவதற்கான காரணத்தை தெளிவாக விளக்குகிறது. அதைப் போன்றே இப்பேரண்டத்தின் தோற்றத்தையும் அறிய முடியும் எனும் வகையில் நினைவு உயர்த்தப்படுகிறது.

மூன்றாவதாக குழந்தைகளுக்கு மதம் இல்லை எனும் விழிப்பை உண்டாக்குவது பற்றியது.

நான்காவதாக, நாத்திகராக வாழ்வது பெருமைக்குறிய ஒன்று என்பது .. .. ..

படியுங்கள் .. .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

பின் குறிப்பு: இந்த நூலின் மின்னூல் பதிப்பை (பிடிஎஃப்) அனுப்பி செங்கொடி தளத்தில் பதிவேற்றுமாறு கோரிய தோழர் கபிலன் அவர்களுக்கு நன்றி.

7 thoughts on “கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

  1. பரப்புங்கள் எனபது அடிமை வார்தையகவே தோணுது

  2. முழுவதுமாக படித்திருக்கிறேன் தோழர். பல்லை கடிக்கும் மொழிபெயர்ப்பு. பல இடங்களில் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திக வெளியிட்டு இருக்கின்றார்கள்.

  3. ஆம் தோழர் கார்கி . மொழிபெயர்ப்பாளர் உரையின் தொடக்கமே எவ்வளவு பெரிய வாக்கியமாக இருக்கிறது பாருங்கள். மொழிபெயர்ப்பவர்கள் இது போன்ற குறைகளை தவிர்த்தால் இன்னும் பலரை சென்றடையும்.

  4. மிக அருமையான புத்தகம் இதனுடன் சேர்த்து
    Selfish gene என்ற புத்தகத்தையும் படியுங்கள் அருமையாக இருக்கும்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்