நூலகம்

வணக்கம் தோழர்களே, நண்பர்களே,

இந்த நூலகம் பகுதியில்

நல்ல நூல்களை, செங்கொடி தளத்தில் பதிவிடும் நூல்களை, இயக்க வெளியீடுகளை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை, ஆசான்களின் ஆக்கங்களை

மின்னூல் (pdf) பதிப்பாக வெளியிட எண்ணியுள்ளேன்.

தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல வாய்ப்பாகவும், நண்பர்களுக்கு சிறந்ததொரு அறிமுகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதன் நிறைகுறைகளை பின்னூட்டமாக தெரிவிப்பதன் மூலம், இன்னும் செம்மைப்படுத்த எனக்கு உதவலாம்.

மேலும் இங்கு வெளியிடப்படும் நூல்களில் சில பதிப்புரிமைக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நூல்களை வெளியிடுவது சரியா? என்பது முதன்மையான ஒரு கேள்வி. இது வியாபார நோக்கமில்லாமல் மக்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் முயற்சி. தவிரவும், இந்த சமூக வலைத்தள காலத்தில் அனைத்து நூல்களும் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, இங்கு வெளியிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். 

தோழமையுடன்

செங்கொடி.

*****************************************************************

நூல்கள்

கடவுள் ஒரு பொய் நம்பிக்கை – ரிச்சர்ட் டாக்கின்ஸ்

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி – லெனின்

மொழிப்போர் ஈகியர் வரலாறு

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு

வரலாற்றுப் போக்கில் தன்னகச் சமூகம் – நெபுரு கராஷிமா

லுத்விக் பாயர்பாக்கும் மூலச்சிறப்புமிக்க ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும் – ஏங்கல்ஸ்

மாபெரும் விவாதம்

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா. வனமாமலை

சமணர் கழுவேற்றம் – கோ. செங்குட்டுவன்

இந்திய தேசியத்தின் தோற்றம்

தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும்

ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்

பெரியார், அம்பேதகர் இன்றைய பொருத்தப்பாடு

மஞ்சள் பிசாசு

பொதுக்கல்வி – லெனின்

பாசிசத்தின் இந்திய முகம்

B5/2021. மகாத்மா அய்யன்காளி

B3/2021. நான் ஒரு பெண் – சரிநிகர் கட்டுரைகள்

B22/2020. மயக்க பிஸ்கட்

B21/2020. புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்

B20/2020. மீளும் வரலாறு அறியப்படாத நந்தனின் கதை – ரவிக்குமார்

B19/2020. தமிழ் சங்கம் டூ காவிச் சங்கம் – ஆதனூர் சோழன்

B18/2020. நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்

B17/2020. இந்து மதப் பண்டிகைகள் – தந்தை பெரியார்.

B16/2020. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன்

B15/2020. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு

B14/2020. கலையும் இலக்கியமும் – மாவோ

B11/2020. இந்திய சீனப் போர் – நெவில் மாக்ஸ்வெல்

B10/2020. பிம்பச் சிறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

B9/2020. கோவில் நிலம் சாதி – பொ.வேல்சாமி

B7/2020. அடிமைப்படுத்தும் குல தெய்வங்கள் – காட்டாறு.

B5/2020. கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும் – கீற்று நந்தன்

B3/2020. கிருமிகள் உலகில் மனிதர்கள் – அக்கு ஹீலர் உமர் ஃபாரூக்

B2/2020. மாவீரன் சிவாஜி: காவித் தலைவனா? காவியத் தலைவனா?

B1/2020. முட்டை அரசாங்கம்

55. இது தான் பார்ப்பனியம் – தொ.பரமசிவன்

54. சிவப்புச் சந்தை – ஸ்காட் கார்னி

53. தோழர் பாலன்

52. இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

51. வேள்பாரி – வரலாற்று நெடுங்கதை

50. புதிய கல்விக் கொள்கை வரைவு 2019

49. காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

48. தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

47. வால்காவிலிருந்து கங்கை வரை

44. பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் பகுதி 1

42. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

41. நினைவுகள் அழிவதில்லை

39. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

38. மேதின வரலாறும் படிப்பினைகளும்

37. அரசியல் சொற்களஞ்சியம்

35. உக்ரைனை முன்னிட்டு கம்யூனிச அவதூறு

32. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – மயிலை.சீனி.வேங்கடசாமி

31. சீனப் புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் – மாவோ

28. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா

27. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை – லெனின்

25. மாசே துங் மேற்கோள்கள்

23. மார்க்ஸ் முதல் மாசே துங் வரை

22. வெகு ஜனங்களிடையே கட்சியின் பணி – லெனின்

20. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

18. குற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும்

17. சரணாகதிப் பொருளாதாரம்

16. இயக்கவியல் பொருள்முதல் வாதம்

14. தாய் – மாக்சிம் கார்க்கி

13. தூக்குமேடைக் குறிப்பு

12. விஞ்ஞானக் கம்யூனிசத்தின் அடிப்படைகள்

11. புரட்சியில் இளைஞர்கள்

10. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ்

9. சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் – லெனின்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

7. நாங்கள் வரலாறு படைத்தோம்

5. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பி. ஏங்கல்ஸ்

4. மூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்

காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?

சோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும் – வி.இ. லெனின்

தமிழர்கள் இந்துக்களா? – பெரியார்

கூலியுழைப்பும் மூலதனமும் – கார்ல் மார்க்ஸ்

சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியில்)

வி இ லெனின் எழுதிய “கூட்டுறவு குறித்து” – எஸ் ஏ ஸெராயெவ்

கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ், ஏங்கல்ஸ்

பெண் ஏன் அடிமையானாள் – தந்தை பெரியார்

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் – லெனின்

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் – ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்

தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல – இரயாகரன்

ஆணாதிக்கமும் மார்க்சியமும் – இரயாகரன்

வெளியீடுகள்

இஸ்லாத்தில் மனுவாதிகள் – மசூத் ஆலம் ஃபலாஹி

B4/2020. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு

28. நாங்கள் உண்மையான தேசபக்தர்கள் – கிஷன் ஜி

3. போபால்: நீதி வேண்டுமா? புரட்சி ஒன்றுதான் பாதை

இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்

வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்

சிறுவணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ் வெளியேறு

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

ஓட்டுப்போடாதே புரட்சி செய்

இந்திய மரபும் பார்ப்பன திரிபும்

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்

46. நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?

கட்டுரை

21. சமச்சீர் கல்வி தீர்ப்பு

19. மரிச்ஜாப்பி படுகொலைகள்

8. இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்

6. தோழர்களின் போராட்டக் களத்தில் நான் – அருந்ததி ராய்

துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால் – புதிய கலாச்சாரம்

கவிதை

2. சனிக்கிழமை கவிதைகள்

காசி ஆனந்தன் நறுக்குகள்

விவாதம்

34. கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம்

33. தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு ஒரு கம்யூனிஸ்டின் சவால்

30. கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா?

23. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே

இறைவன் இருக்கிறானா?

பாலியல் பிரச்சனைகள்: இஸ்லாமா? கம்யூனிசமா?

ஏழ்மையும் அதன் காரணமும்

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

புதிய ஜனநாயகம் இதழ்கள்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2013

புதிய ஜனநாயகம் ஜூலை 2013

புதிய ஜனநாயகம் ஜூன் 2013

புதிய ஜனநாயகம் மே 2013

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013

புதிய ஜனநாயகம் மார்ச் 2013

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013

புதிய ஜனநாயகம் ஜனவரி 2013

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2012

புதிய ஜனநாயகம் நவம்பர் 2012

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2012

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012

புதிய ஜனநாயகம் ஜூலை 2012

புதிய ஜனநாயகம் ஜூன் 2012

புதிய ஜனநாயகம் மே 2012

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012

புதிய ஜனநாயகம் மார்ச் 2012

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012

புதிய ஜனநாயகம் ஜனவரி 2012

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2011

புதிய ஜனநாயகம் நவம்பர் 2011

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2011

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011

புதிய ஜனநாயகம் ஜூலை  2011

புதிய ஜனநாயகம் ஜூன் 2011

புதிய ஜனநாயகம் மே 2011

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011

புதிய ஜனநாயகம் மார்ச் 2011

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011

புதிய ஜனநாயகம் ஜனவரி 2011

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2010

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2010

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010

1. புதிய ஜனநாயகம் ஜூலை 2010 போபால் சிறப்பிதழ்

புதிய ஜனநாயகம் ஜூன் 2010

புதிய ஜனநாயகம் மே 2010

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010

புதிய ஜனநாயகம் மார்ச் 2010

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009

புதிய ஜனநாயகம் மார்ச் 2009

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2009

புதிய கலாச்சாரம் இதழ்கள்

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2013

புதிய கலாச்சாரம் மே 2013

புதிய கலாச்சாரம் மே 2012

புதிய கலாச்சாரம் மார்ச் 2012

புதிய கலாச்சாரம் நவம்பர் 2011

புதிய கலாச்சாரம் ஜூலை 2011

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010

புதிய கலாச்சாரம் ஜூலை 2010

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009

குடியரசு இதழ்கள்

15. 1925 ஆம் ஆண்டு தொகுப்பு

1926 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧, பகுதி ௨

1927 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1928 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1929 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1930 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1931 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1932 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1933 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1934 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1935 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1936 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1937 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

1938 ஆம் ஆண்டு தொகுப்பு: பகுதி ௧பகுதி ௨

Revolt

சமர் இதழ்கள்

சமர் 31

சமர் 30

சமர் 29

சமர் 28

சமர் 24

தடம் மின்னிதழ்

36. பிப்ரவரி 2016

பிற

40. 2017 காலண்டர்

45. 2018 நாட்காட்டி

2020 நாட்காட்டி

82 thoughts on “நூலகம்

 1. அருமையான பணி தோழர், இன்னும் அதிக நூல்களை வெளியிடுவீர்கள் என நம்புகிறென்.

 2. தோழர் இரயாகரன் எழுதிய , தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.என்ற அருமையான நூல் இப்போது கிடைப்பதில்லை
  தாங்கள் அதை மின்னூலாக வெளியிட்டால் மிகுந்த பயனுல்லதாக இருக்கும்.

 3. நன்றி தோழர் ! தேசியம் தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல நூலை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி !, டவுன்லோடு செய்து பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.

 4. தேசம் கடந்து வாழ்கின்ற படிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள முயற்சி பயனடைந்தவன் என்ற முறையில் நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்னும் பல புத்தகங்களை வலை ஏற்ற வேண்டுகிறேன்

 5. தேசியம் தொடர்பாக ஒரு இடுக்கை எழுத கொரிஎருந்தேன் 
  \\தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல – இரயாகரன்// இந்த புத்தகத்தை வலையேற்றி இருப்பதன் மூலம் பதில் கிடைக்க பெற்றேன் நன்றி.

 6. இது போன்ற முயற்சிகள்தான் மார்க்சியத்தை வளர்க்கும்

 7. வரவேற்கத்தக்கப்பணி. தொடர்ந்து பல அரிய நூல்களை வலையேற்றுங்கள்.

 8. நீங்கள் வலையேற்றும் இப்புத்தகங்கள் தற்போதெல்லாம் மிக அரிதாகி விட்டன. அவை கண்டிப்பாக கம்யூனிசத்தை நாடுவோருக்கு மிக்க பயனாக இருக்கும் . குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மிகவும் சிறப்பான புத்தகம்

  தோழருக்கு நன்றி

  கலகம்

 9. நன்பர் செங்கொடி நான் கம்னிச படகின் ஒட்டை வழியாக அப்புடின்னு ஒரு பதிவு எழுதாலம் என்ற முயற்சியில் இருக்கிறேன் அதற்கு கம்னிச சம்ந்தப்பட்ட புத்தங்கள் தேவைப்படுகின்றன உங்களிடம் உள்ள புத்தங்கள் ஏற்கனவே இராயாகரன் வலைத்தளத்திலும் நூலகம் என்ற வலைத்தளத்திலும் கிடக்கின்றன அதனால் வேறு புதிய புத்தங்கள் இருந்தால் வெளியிடவும் (முலதனம்) போன்ற புத்தங்கள் நன்றி

 10. கால் மார்க்ஸ் பொருளாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது வீட்டில் தனது பிள்ளைகள் உணவில்லாமல் பட்டினியில் தவித்தார்கள்,

  மார்க்கின் மனைவி அவரை அழைத்து தங்கலது பிள்ளைகளை புதைப்பதற்கு பெட்டி கேட்டார்.

  பாவம் இப்படிப்பட்ட ஒருவருக்கும் ஆதரவாளர்களா??????

  சிந்திப்போருக்கு நேர்வழி உண்டு

 11. “கடை வாய்ப்பற்களால் கோரிப்பிடித்திருக்கும் கம்யூனிசமும் காலம் கடந்த கொள்கைகளும்” என்ற தலைப்பில் எழுதுங்கள்.
  நன்றாக இருக்கும்.

  அல்லது

 12. ஹைதர்,
  மூலதனமும் கூலியுழைப்பும் என்ற நூல் தமிழ் அரங்கத்தில் உள்ளது. தரவிறக்கம் செய்து படித்து பாருங்களேன்.

 13. தோழர்களே,
  அரசியல் பொருளாதரம் (Political Economy) பற்றிய புரிதலை மேம்படுத்தும் – மார்க்ஸிய நூல்கள் (தமிழ் அல்லது ஆங்கில ) தயவு செய்து பரிந்துரை செய்யுங்களேன்..

 14. திரு செங்கொடி அவர்களுக்கு,

  தங்களின் வலைத்தளம் ஒரு சிலருக்கு ஒத்து ஓதுவதற்காகவும், இஸ்லாமிய விரோதத்தை வளர்பதர்காகவும் ஆரம்பிக்கப்பட்டது என்று என்ன தோன்றுகிறது.

  LTTE இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வேறு சில இயக்கங்கள் வலுவாக காலுன்ரி இருந்தது, அவற்றை எல்லாம் பிரபாகரன் சூழ்ச்சியாலும், சிலர் உதவியுடனும் அழித்தார் என்பது உங்களுக்கு தெரியாதா?
  துரகிகளின் மௌனத்தில் துடிக்கும் முள்ளி வைக்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே பிரபாகரன் தான்.சக தமிழர்களை, தனக்கு முன்னால் வலுவாக வேருன்றி இருந்த இயக்கங்களின் தலைவர்களி கொன்று குவிக்கும் போது துரோகத்தை பற்றி இவருக்கு தெரியவில்லையா? அங்கு இருக்கும் முஸ்லிம்களை மிரட்டி துரத்தியது எதில் சேரும்?தான் மட்டும் தான் இங்கு இருக்கவேண்டும், தனுக்கு கட்டுபட்டவகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று ஆயுதத்தை கொண்டு மிரட்டியும், கொன்றும், துரத்தியும் சாதித்த சாம்ராஜ்யம் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும்? இவரை எதிர்த்தவர்களுக்கு கருணா போன்றவர்கள் துரரோகி என்றால், இவரால் துரத்தபட்ட முஸ்லிம்களுக்கு, இவரால் கொன்று குவிக்கப்பட்ட சக தமிழர்களுக்கு இவரும் மிகப்பெரிய, கடைந்தெடுத்த துரோகிதானே?

  இதனை லட்சம் மக்கள் சாக கரணம் பிரபாகரன் தான். எல்லோரையும் கொன்றாவது தான் மட்டும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதுதான், உண்மையான மனிதன் தன்னால் ஒரு உயிர் சாகக் கூடாது என்று நினைப்பான்.அனால் எதனை லட்சம் மக்கள் செத்தாலும் பறவை இல்லை தான் ஆட்சி செய்யவேண்டும், எந்த ஒப்பந்தத்திற்கும் ஒத்துகொள்ள மாட்டேன் என்பவன் மனிதனா?
  அங்கு காலம், காலமாக வாழ்ந்த முஸ்லிம்களை துரத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது? உங்கள் நாட்டு மன்னன ஒரு நாட்டின் மீது படை எத்தால் அது வீரம், அதுவே வேறொருவான் நாட்டை கைப்பற்றினால் அது வந்தேரியவன்,எங்கள் மண்ணை விட்டு வெளியே செல் எனபது முரண பாடாக தெரிய வில்லைய உங்களுக்கு?அப்படி பார்த்தல் தமிழர்களின் சொந்த பூமிய அது? அங்கு பிறந்ததால், வளர்ந்ததால் சொந்த மண் என்றால் அங்கு உள்ள முஸ்லிம்களுக்கும் அது சொந்த மண் தான்.
  இஸ்லாம் மதத்திற்கு எதிராக அறிவியலை அழைக்கும் நீங்கள், இதற்க்கு விடை சொல்லுங்கள்.களிமண்ணால் படைக்க பட்டு அதற்க்கு உயிர் கொடுக்கப்பட்டது அது எப்படி சாத்தியம் ஆகும் என்று விதண்டாவாதம் செய்யும் நீங்கள், உயிர் அற்ற பொருளில்லிருந்து உயிர் உள்ளவை தோன்றின என்று கூறும் (Living things came from non living things ) அறிவியலில் மட்டும் எப்படி இது சாத்தியமாகும்?இதற்க்கு விளக்கம் கூற முடியாம உங்களால்?உயிர்கள் தண்ணீரில் தான் தோன்றின முதன் முதலில் என்று கூறும் உங்கள் அறிவியல், எப்படி ஒரு உயிர் தானாக தோன்ற முடியும் என்று விளக்க வேண்டும்?

  LTTE யால் அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் வைத்தேரிச்சல் தான் இப்போது LTTE அடித்து விரட்டபட்டடு, இதில் அப்பாவி மக்களும், உயிருக்கு பயந்து அவர்களை (எதிர்க்க முடியாதவர்கள் )ஆதரிதவர்களும் பலியானதுதான் பரிதாபம்.
  இப்போது புலம் பெயர்ந்து பல் வெறு நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாட்டு மக்களால் விரட்டபட்டால் அவர்களின் நிலைமை என்ன?விரட்ட அவர்களுக்கும் விரட்ட உரிமை உள்ளது அல்லவா?
  அனால் அவர்கள் மனிதர்கள், ஒரு பழமொழி உண்டு, “கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என் மொழி, என் இனம், என் ஜாதி என்று வெறி பிடித்து அலைந்தால் இந்த நிலைமைதான். ஏன் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் இது எங்கள் மண் இங்குதான் இருப்போம் என்று இருக்கவேண்டியதுதானே,பிறரை என் மண்ணில் கால வைக்காதே என்பது, உங்களுக்க் என்று வந்தால் பிற நாட்டில் சென்று தஞ்சம் தேடிகொல்வது.மதம் என்று வரும் போது மனிதன், அறிவியல் என்று பார்க்கும் உங்களை போன்றவர்கள், இனம் என்றவுடன் என் மண், என் மக்கள் என்று ஒரு குறிகிய வட்டத்துக்குள் சுருங்குவது, பின் இதை போன்ற கட்டுரைகளை எழுவது தகுதியட்ட்ற செயல்
  உங்கள் அறிவியல் படி பார்த்தல் மனிதன் தோன்றியது சவுத் ஆப்பிரிக்காவில் தான், எல்லோரும் அங்கே பொய் இது தான் என் மண், இந்த மண்ணின் மைந்தன் நாங்கள் தான் என்று சொள்ளமிடியுமா? உங்களுக்கு வேண்டும் என்றால் அறிவியல்.இவுலகில் எல்லோரும் குடிஎரியவர்கள்தான், உங்கள் கூற்று படி பார்த்தல் குமரிக்கண்டம் தான் நம் திராவிடர்களின் பூமி, அது அழிந்தவுடன் எல்லாம் சென்றுவிட்டது, நாம் எல்லோரும் பிற இடங்களில்தான் புலம் பெய்யர்ந்து வாழ்கிறோம், இங்கு வந்து என் மண், என் மக்கள் என்றால் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போலே.

 15. நண்பர் முகம்மது,

  உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் அப்படியே ஆதரிப்பவர்களல்ல நாங்கள். முள்ளிவாய்க்கால் கட்டுரையே அப்படி ஆதரிப்பவர்களை நோக்கி விமர்சன ரீதியாக கேள்விகளை எழுப்பியிருப்பது தான். அதற்காக இலங்கை தமிழர்களும் விடுதலைப்புலிகளும் ஒன்று என்ற ரீதியில் அதை அணுக முடியாது. விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் அதற்கு அடிப்படை என்ன என்பதை பரிசீலனை செய்து பாருங்கள்.

  மதத்தையும் அரசியலையும் ஒன்றுபடுத்த முடியாது. நீங்கள் மதப்பற்றுடையவராக இருந்தால், இஸ்லாத்தின் மீது இங்கு வைக்கப்படும் விமர்சனங்களுக்கு குறிப்பாக எதிர்வினை செய்யலாம். அப்போது தகுந்த பதில் தரப்படும். மாறாக இரண்டையும் குழப்பிக்கொள்ளவேண்டாம்.

  செங்கொடி

 16. //மதத்தையும் அரசியலையும் ஒன்றுபடுத்த முடியாது.//… அடடா…. இதெல்லாம் உங்களுக்குத்தான் பொருந்தும் செங்கொடி…. முஸ்லிம்களுக்கு அல்ல….

  உலகவாழ்க்கையில் மனிதன் அரசனாக இருந்தாலும்… ஆண்டியாக இருந்தாலும்….. அரசியல்வாதியாக இருந்தாலும்…பாட்டாளி வர்க்கமானாலும் அவனுக்கு அவனுடைய வாழ்க்கையை எப்படி இவ்வுலகில் வாழவேண்டும் என்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் இஸ்லாம் மட்டும்தான் என்று தெரியாதவரைப்போல நடிக்கவேண்டாம்….செங்கொடி…

  //மாறாக இரண்டையும் குழப்பிக்கொள்ளவேண்டாம்//.

  நீங்கள் குழப்பாமலும் குழம்பாமலும் இருந்தால் சரி….செங்கொடி. ஆனால், தெளிவாக இருப்பதைப்போல நீங்கள் நடிக்கவேண்டாம் செங்கொடி….

  பலரும் நினைப்பதுபோல கம்யூனிசம் என்ற இயந்திரம் ஓடி ஓடி ஓரளவுக்குமேல் ஓடமுடியாமல் பழுதாகி மண்டையைபோட்டது அல்ல என்பது எனக்குத்தெரியும்….

  அது இதுவரை ஓடவே ஓடாத…. அவ்வளவு ஏன்…இதுவரை ஸ்டார்ட் ஆக முடியாத மிகப்பெரிய ஸ்டார்டிங் ட்ரபிள் உள்ள… இதுவரை யாருமே ஒட்டாத…. யாரும் பயன்படுத்தாத…. எப்படி நடைமுறை படுத்துவது என்றே தெரியாத அரதப்பழைய காயலான் கடை இயந்திரம் என்பது எனக்குத்தெரியும்….

  ஆனால், இதை வைத்துக்கொண்டே இவ்வளவு அலம்பலா…… ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பப்பப்பா… தாங்க முடியல செங்கொடி….

 17. நன்பர் செங்கொடி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொன்டேன் மிக்க நன்றி சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியில்)

 18. தோழர், பு.ஜ. வெளியீடு என்று தான் நினைக்கிரேன், “நெடும்பயண கதைகள்”
  நூல் இருந்தால் மின்னூலாக வெளியிடுங்கள் மிகுந்த பயனுல்லதாக இருக்கும்.

 19. Mr. Senkodi…….
  Your are doing great work about communism….
  i download all the books.. its really great….

  but….but… i cant accept your view of Islam….

 20. தோழர் ஸ்பார்டகஸ்,

  நெடும்பயணக் கதைகள் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் வெளியிடுகிறேன்.

  செங்கொடி

 21. காசி ஆனந்தன் நறுக்குகள் அருமையான புத்தகம் இது போன்ற புத்தகம் வேறு இருந்தால் வாலையேற்றுங்கள் என்னை ஈர்த்த சில வரிகள், பூனை கழுத்தில் மணி கட்டுவது யார்? ஏன்? ஒடி ஒளியவா? நூறு எலிகளாய் பூனையின் கழுத்தை கடித்து குதறுவோம்

 22. வரவேற்கத்தக்கப்பணி. தொடர்ந்து பல அரிய நூல்களை வலையேற்றுங்கள்.

 23. அருமையான பணி தோழர்! வாழ்த்துக்கள்!

 24. கீற்று என்ற தளத்தில் வேளியிடப்பட்ட அதே கட்டுரைய அல்லது வேற கீற்றில் நான் முழுமையாக படித்து விட்டேன்

 25. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – ஏங்கெல்ஸ் இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதில் தாமதமும் சற்று நேரம் கழித்து பிழை எனவும் தெரிவிக்கிறது. சற்று கவனிக்கவும் காரணம் அறிந்த நண்பர்கள் தரவிறக்கம் செய்ய உதவிடுங்கள்.
  நன்றி

 26. தோழர்களுக்கு வணக்கம்,

  நூலகத்தில் நான் தரவேற்றும் நூல்களுக்கும், காணொளியில் நான் தரவேற்றும் காட்சிகளுக்கும் ஸித்து தளத்தை உபயோகிக்கிறேன். குறிப்பாக நான் ஸித்து வை உபயோகிப்பதற்கான காரணம்,

  ஸித்து இலவசமாக வரம்பற்ற இடவசதி அளிக்கிறது (ஏணைய தளங்கள் 1ஜிபிக்கு அதிகமாக இடம் தருவதில்லை)

  ஸித்து நாம் தரவேற்றும் எந்தக் கோப்பையும் நீக்குவதில்லை, ஆனால் பிற தளங்கள் கடைசி தரவிறக்கத்தின் பின் குறிப்பிட்ட நாட்களின் பிறகு நீக்கிவிடுகின்றன.

  ஆனால் பாப் அப், தாமதம் போன்ற இடையூறுகள் ஏற்படுவதாக தரவிறக்கும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

  மேற்கண்ட‌ இரண்டு வசதியையும், பாப் அப், தாமதம் போன்ற இடையூறுகள் இல்லாமல் தரும் வேறு வழி, அல்லது தளங்கள் இருக்கிறதா என தேடிக்கொண்டிருக்கிறேன்.

  தெரிந்தவர்கள் இது குறித்து தெரிவித்தால் மகிழ்வேன். உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

 27. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூலுக்கான முகவரி கிடைக்குமா?

 28. வணக்கம் தோழர்,

  சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்

 29. கடவுளின் இருப்பு குறித்த விவாதம் ஏன் இன்னும் வெளியிடப்படாமலேயே உள்ளது தோழர்?

 30. வணக்கம் தோழர்,

  ஒரு சிறிய இடர்பாடு காரணமாக தாமதமாகிவிட்டது. இன்று இரவு அல்லது நாளை வெளியிடப்பட்டுவிடும்.

 31. senkodi ! whenever i am clicking the document to download, it is giving server not found error. could you please help me on this ? i am able to get none of the books from zoodu.

  thanks in advance

  Aathavan

 32. நண்பர் ஆதவன்,

  உங்களின் பின்னூட்டத்தைப் படித்ததும் சோதனைக்காக சில நூல்களின் தரவிறக்கச் சுட்டியை சோதனை செய்து பார்த்தேன். எல்லாம் சரியாக இயங்குகின்றன. நீங்கள் எந்த நூலை தரவிரக்க முயன்றீர்கள் என்பதை தெரிவித்தால், அதில் ஏதும் பிரச்சனை இருந்தால் சரி செய்ய முயல்கிறேன்.

 33. அருமை.சோலிசப்பெண்கள் பற்றிய நாவல்,கட்டுரையை வெளிவிடவும்.

 34. படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஏராளமான செய்திகள்.தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துகள்!

 35. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூலு download பண்ண முடியுமா?

 36. தோழரே! வீரம் விளைந்தது..! நூல்…..! கிடைக்குமா?

 37. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்நூல் வடிவில் கிடைக்குமா?

 38. நிறைய ஆங்கில புத்தகம் மற்றும் கவிதை புத்தகத்தினை தமிழில் மொழிபெயர்த்து தரவும்

 39. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
  அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
  தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
  வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
  நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
  உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் “பணநாயகம்” அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
  அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.
  எண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவதோடு, எதையும் உருப்படியாக மக்களுக்காக செய்யாது அழிவை மட்டுமே செய்கின்ற இசுலாமிய தீவிரவாத இளைஞர்களினால், அதிகளாவினாலான உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி, ஒருபோதும் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்த இயலாது
  – நல்லையா தயாபரன்

 40. தரவிரக்கங்களை கூகிள் டிரைவ்வில் ஏற்றம் செய்து இணைப்புக்கொட்ங்கள். 4ஷேர். ஸ்க்ரைப் அவைகளெல்லாம் பல அப்பளிகேசன்களை தானாக கணிணியில் இறக்கிவிடுகின்றன. சுற்றி சுற்றி வந்து தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. கூகிள் டிரைவ் சிக்கலில்லாதது.

 41. [3/3, 11:54 AM] Srinath V: Hi..Sir. I am Srrinath. here.
  [3/3, 11:54 AM] Srinath V: At present wth Mr. Bagyaraj Sir n his Bagya weekly and film.Srrinath.
  [3/3, 11:54 AM] Srinath V: A small intro was attached. Age f 67 and have a 43 years f experience n all languages n d film industry as a producer, distributor and Director.Srrinath. Going to start a feature n Tamil and Hindi. வாழ்க உங்கள் தமிழ் சேவை. srrinath@yahoo.com

 42. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம்

  இந்த புத்தகம் pdf-வடிவில் கிடைக்குமா…..?

 43. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற ஜான் பெர்கின் புத்தகம் Pdf வடிவில் கிடைக்குமா

 44. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதன் வாக்குமூலம் எனும் ஜான் பெர்கின்ஸின் நூல் பதிப்பக காப்புரிமைக்கு உட்பட்டது. அவ்வாறான நூல்களை பொதுவெளியில் பகிர முடியாது என்பதை அறியவும். நன்றி.

 45. மார்க்சிய ஆசான்களின் மூல நூல்கலையும்.ஒடுக்கப்பட்ட மக்களின் கதை,கவிதை,நாவல்,கடடுரை, பாடல், என தமிழில், மேலதிகமாக pdf.வடிவில் பதிவிட வேண்டி வாழ்த்தும், அன்பரசு .

 46. தோழர் செங்கொடிக்கு செவ்வணக்கம்.
  உங்களின் மின்னூலாக்கம் மிக. அருமையானதொரு பணி. இது போன்ற பணியை செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
  இருப்பினும் நூல்களின் தரவிறக்கத்தை எளிமை படுத்தியிருந்தால் நலம். சிலருக்கு இது இடையூறாக அமையலாம்.
  இருப்பினும் மிகச்சிறப்பு. இன்னும் பல புரட்சியாளர்களின் புத்தகங்களை மினௌனூலாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.
  *வாழ்த்துக்கள் தோழர்*
  புரட்சிகர வணக்கத்துடன் (இசைப்பிரியன்) சாமுவேல் சார்லி

 47. இந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்ட நில பிரபுத்துவம், தொழிலாளிகள் பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்குபெற்ற வரலாற்றுப்புத்தகங்களை வெளியிட்டால் கூடுதல் சிறப்பு.
  புதிதாக கம்யூனிசம் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு வரலாறுகளை படித்தபின்பு கம்யூனிசத்தை கற்க விரும்புவார்கள்.

 48. நியுசெஞ்சுரி(ராதுகா பதிப்பகம்)வெளியிடு “கண்தெரியா இசைஞன் நூல் ” கிடைத்தால் பதிவேற்றம் செய்யவும்

 49. எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘இந்து, இந்தி, இந்தியா’ 1993ல் வெளிட்டது பதிவேற்றுங்கள் தோழர். இன்றைக்கு மிகமிக அவசியம் தேவைபடும் நூல்.

 50. Very useful Nana, I have one request, we must know world politics details, so kind add that kind of book…. Thank u…

 51. சகோ எனக்கு பிரிட்டிஷ் உளவாளி ஒப்புதல் வாக்கு மூலம்,தமிழன் ஏன் அடிமையானான், pdf books கிடைக்குமா pls

 52. பிரிட்டிஷ் உளவாளி வாக்குமூலம்,தமிழன் ஏன் அடிமையானான் புக்ஸ் கிடைக்குமா சகோ pls

 53. தங்களது முயற்சியை வரவேற்கின்றேன் அத்துடன் தங்களது நூலகத்தில் சேர சோழ பாண்டியரது சரித்திர நாவல்களையும் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்

 54. ஐயா வணக்கம், பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் இப்புத்தகம் pdf கிடைக்குமா

 55. செங்கொடி தோழர் அவர்களுக்கு வணக்கம்!
  மாகஇக வெளியீடுகள் மட்டுமின்றி மற்ற மாலே அமைப்புகளின் வெளியீடுகளையும் பதிவிட்டால் சரி தவறுகளை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s