இந்து மதப் பண்டிகைகள்

இன்று விநாயகர் சதூர்தியாம். கொரோனாவால் இந்தக் கூத்துகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கடவுளை வைத்து வழிபடுவதற்கும், கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிற மதத்தினர் செய்வதெல்லாம் கடவுளை வைத்து வழிபடுவது தொடர்பான திருவிழாக்கள், இந்து மதத்தில் செய்யப்படுவதெல்லாம் கடவுளை வைத்து அரசியல் செய்வது தொடர்பான விழாக்கள். ஆனால் இதில் சிக்கல்கள், தடைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், கடவுளை வழிபட தடை விதிக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரசியல் கடவுளை, ஆன்மீகக் கடவுளாக உருமாற்றி விடுவார்கள். இந்த விநாகர் விழாவிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவைக் காரணம் காட்டி எல்லா மத திருவிழக்களும், கூடுகைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஏன், இந்து மதத்தின் அழகர் ஆற்றில் இறங்குவதிலிருந்து சுடலை மாடன் திருவிழாக்கள் வரை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவை எது குறித்து கவலைப்படாத சங்கிகள் விநாயகருக்கு மட்டும் தடையை மீறுவோம் என்று குதிக்கிறார்கள்.

இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால், சங்கிகள் கொண்டாடும் கடவுளர்கள் அனைவருமே அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கடவுளர்கள் என்பது தான். இதை ஓங்கி ஒலிக்க வேண்டியிருக்கிறது.

இந்து மத அதாவது சங்கிகள் கொண்டடும் இந்து மத கடவுளர்களையும் அவர்கள் சார்ந்த திருவிழக்களையும் குறித்து பெரியாரின் கருத்துகளை கொண்டது தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் இந்த சிறு வெளியீடு. தற்போதைய சூழல்களை எதிர்கொள்ள இது போதுமான தரவுகளைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும்,  இன்றைய சூழல்களை எதிர்கொள்ளும் விதமாக குறைந்த விலையில் அல்லது விலையில்லாமல் இது போன்ற சிறு வெளியீடுகள் அதிகம் வெளிக் கொண்டு வந்து மக்களிடையே பரப்பப்பட வேண்டும்.

தனி மனிதர்கள் சார்ந்து கருப்பர் கூட்டம் போல் இவை வெளிப்படுவதைக் காட்டிலும், அமைப்புகள் இயக்கங்கள் வழியாக வெளிக் கொண்டுவருவது அதிக வீச்செல்லையையும், ஆற்றலையும் கொண்டிருக்கும்.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்