மொழிப்போர் ஈகியர் வரலாறு

இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு, பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட வேண்டாத துணுக்கு போல் உருத்தலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் மொழி குறித்தான ஒவ்வொரு செயலும் உருத்தலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அமித்ஷா மொழி குறித்து பேசும் ஒவ்வொரு பேச்சும் சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. பொதுவாக, பாஜக வினர் எவருக்கும் அரசியல் சாசனம், அதன் வாக்குறுதிகள், பல்வேறு மாநிலங்களின் உரிமைகள், அதன் வாழ்வியல் மொழியியல் தனித்தன்மைகள் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் கட்டுப்பாடும் கிடையாது. … மொழிப்போர் ஈகியர் வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தை தான் தமிழ்ப் புத்தாண்டு

தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது. முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம். “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.” (குறள் 4) … தை தான் தமிழ்ப் புத்தாண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறியப்படாத தமிழ் மொழி

மொழி சார்ந்த மிகையுவப்புகள் (மிகை + உவப்பு = மிகையுவப்பு : பெருமிதம்) உலகெங்கும் உண்டு. ஆனாலும், தமிழர்களின் மிகையுவப்புக்கு அருகில் கூட ஏனையவை ஒரு போதும் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதில் தவறும் இல்லை. ஏனென்றால், புதிது புதிதான செய்திகள் அதனுள்ளிருந்து கிளைத்து வந்து கொண்டே இருக்கிறது. திராவிடம் எனும் சொல் குறித்த விவாதங்கல் இங்கு அதிகம். திராவிடம் எனும் சொல்லை தமிழுக்கு எதிராக நிறுத்தி ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிடம் … அறியப்படாத தமிழ் மொழி-ஐ படிப்பதைத் தொடரவும்.