இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?

அண்மைக் காலங்களில் சாதிய மோதல்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதை செய்திகளில் காண்கிறோம். நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்டது, கழுகுமலை மாணவர்கள் மோதல், திசையன்விளை படுகொலை, வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்தது, திருத்தணி பள்ளியில் மலம் பூசியது என நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? முன்பு போல் கலவரங்கள் என்ற பெயரில் முன் திட்டமிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படவில்லை என்று அமைதி கொள்வதா? அல்லது மாணவர்கள் கூட இலக்காகி விடுகிறார்களே என்று வேதனை … இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே

எழுத்தாளர் ஜெயகாந்தன், 'கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது, 'எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்' என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது … ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பில்கிஸ் பானு பேசுகிறேன்

எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட … பில்கிஸ் பானு பேசுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்.. சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க.. என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் … தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்தகார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.தமிழக லஞ்சஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் … நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..-ஐ படிப்பதைத் தொடரவும்.

முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக

பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜியோ கட்டண உயர்வு ஏன்?

அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம்குமார் கொலை வழக்கு

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் காவி … ராம்குமார் கொலை வழக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.