ஜியோ கட்டண உயர்வு ஏன்?

அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம்குமார் கொலை வழக்கு

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் காவி … ராம்குமார் கொலை வழக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீயது ஆரியமா? பிராமணியமா?

வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக் கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்துள்ள பதில்கள் குலுக்கை வலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் வரலாற்று உரை. இதை வால்கா முதல் கங்கை வரை எனும் ராகுல சங்கிருத்தியாயனின் நூலுக்கான விமர்சனம் என்றும் கொள்ளலாம். தவறவிட்டு விடாதீர்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில காணொளிப் பதிவுகளும் உள்ளன. அவைகளையும் சேர்த்துப் பாருங்கள். எழுப்பப்பட்ட கேள்விகள், 1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் … தீயது ஆரியமா? பிராமணியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: வைரசா? லாபவெறியா?

கொரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் சிலர் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தார்கள் (அது ஏற்புடையதா இல்லையா என்பது வேறு விதயம்) அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நிகழ்வுகளில் கொரோனா காலத்தில் அரசுகளின் செயல்பாடு சரியில்லை என விமர்சித்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 லட்சம் கோடி அறிவிப்புக்குப் பின் அரசு குறித்தான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசு ஏன் இப்படி செயல்படுகிறது எனும் கேள்வி கொண்டவர்களாகி … கொரோனா: வைரசா? லாபவெறியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.