அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

 

தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.

 

மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வழங்கும் தொகை. இத்தொகையை மணமகள் தான் விரும்பும் அளவுக்கு கேட்டு வசூலித்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே இதை வசூலித்து பெண் தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்வதால் இது பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். இதற்கு இந்தியாவில் நடக்கும் வரதட்சனை கொடுமைகளை துணையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

 

வரதட்சனையோ, தனதட்சனையோ இரண்டுமே தனியுடமையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம். பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. வரதட்சனை என்றாலும், தனதட்சனை என்றாலும் சமூகவியலாளர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம், ஆணுக்கு சாதகமான பெண்ணின் இடப்பெயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது என்பதும், பெண்ணை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஆண் ஏற்றுக் கொள்வதால் அதற்கான ஈட்டு என்பதும் தான். ஆக திருமணத்தின் போது ஆண் கொடுத்தலும் பெற்றாலும் அதன் பொருள் பெண் ஆணின் சொத்தாக இருக்கிறாள் என்பது தான். இதில் வரதட்சனை சமூகச் சீர்கேடு, தனதட்சனை பெண்ணுக்கான உரிமை என்று பிரித்துக் காட்டுவது உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.

 

இந்தியாவில் வரதட்சனைக் கொடுமைகள் பரவலானவை. திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பணமோ, பொருளோ வாங்கி வருமாறு துன்புறுத்துவதில் தொடங்கி கொலை செய்வதுவரை நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம், முப்பதைக் கடந்த பின்பும் திருமணமாக வழியின்றி முதிர்கண்ணிகளாக நிற்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு மாற்று தனதட்சனையாக இருக்க முடியுமா? எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் திருமணத்திற்கு பொருள் சேர்ப்பதற்காகவே இளமையைச் செலவழிக்கும் முதிர்கண்ணன்கள் நாற்பதைக் கடந்தும் இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவில் நிகழும் கொடுமைப்படுத்தலும், கொலை புரிவதும் அந்த நாடுகளில் இல்லை. இது வரதட்சனை, தனதட்சனை வித்தியாசத்தால் நேர்ந்ததல்ல, ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு.

 

இந்த அடிப்படைகளை அறியாமல், சமூக, கலாச்சார ஆழங்களுக்குள் இதன் அடிவேர் புதைந்திருப்பதை புரிந்து கொள்ளாமல்; வரதட்சனை கொடூரங்களையும், ஸ்டவ் வெடிப்புகளையும் சுட்டிக் காட்டி, மரபு ரீதியான அரபு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இஸ்லாமிய மஹ்ர் தான் இதன் ஒரே தீர்வு என்றும், இதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறிவிட்டது என்றும் நீட்டி முழக்குவது மதவாதிகளின் மூன்றம் தர பரப்புரை உத்தியேயன்றி வேறொன்றுமில்லை.

 

பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்னிட்டே மஹ்ர் தொகையை மணப்பெண்ணே தீர்மானித்து, வாங்கி, தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இவ்வுரிமையை இஸ்லாம் வழங்கியிருப்பது சமூகப் புரட்சியில்லையா? என்பது மதவாதிகள் முன்வைக்கும் கேள்விகளில் முதன்மையானது. இதை இரண்டு விதங்களில் அணுகலாம், 1. இஸ்லாம் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா? 2. உரிமையை முன்னிட்டுத் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா?

 

செமித்திய பிரிவின் அனைத்து இனங்களிலும் மணமகன் மணமகளுக்கு மணக்கொடை வழங்குவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆப்ரஹாமின் ஊழியன் ரெபேக்காளுக்கு கொடுத்த மணக்கொடை குறித்து ஆதியாகமம் 24:53 கூறுகிறது. ஹம்முராபியின் சட்டங்களில் மணக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹீப்ரு மொழியில் மொஹர் என்றும், சிரிய மொழியில் மஹ்ரா என்றும் குறிப்பிடப்படும் மஹ்ர், அரபுக்கு மட்டுமல்லாது அந்தப் பகுதியின் அனைத்து மொழியிலும் குறிப்பிடப்படும் சொல்லாக இருப்பதே அனைத்து இனங்களிலும் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.

 

முகம்மதுவுக்கு முந்திய அரேபியாவில் சதாக் என்றும் மஹ்ர் என்றும் இரட்டை வழக்கங்கள் இருந்திருக்கின்றன. மஹ்ர் மணப்பெண்ணின் தந்தைக்கும், சதாக் மணப்பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. குரானின் 4:4 வசனம் மணக்கொடையை குறிப்பதற்கு ’சதக்கா’ எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. ‘ஷிகார்’ எனும் திருமண முறையை தடை செய்வதாக குரான் பேசுகிறது. கொண்டு கொடுக்கும் திருமண முறைக்குத் தான் ஷிகார் என்று பெயர். ஏன் இதை தடை செய்கிறது என்றால் இரண்டு பக்கமும் மஹ்ர் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக மஹ்ரை நீக்கிக் கொள்கிறார்கள் என்பதால், மஹ்ர் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனும் அடிப்படையில் ஷிகார் திருமணத்தை தடை செய்கிறது. இவைகளெல்லாம் முகம்மதின் காலத்திற்கு முன்பே திருமணத்தில் பெண்ணுக்கு மஹ்ர் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள். முகம்மது இதில் செய்ததெல்லாம் சதாக் என்றும் மஹ்ர் என்றும் தனித்தனியாக கொடுக்கப்பட்டு வந்ததை ஒன்றாக்கி மஹ்ர் மட்டும் என்று ஆக்கியது தான். முகம்மதின் காலத்தில் மஹ்ர் பெண்ணின் தந்தைக்கு உரியது என்பதால், இனி மஹ்ர் பெண்ணுக்கு உரியது என்பதை தனது குரானில் சற்றே அழுத்தத்துடன் குறிப்பிடுகிறார் முகம்மது. அந்த அழுத்தம் தான் பெண்ணுரிமையாக ஜோடனை செய்யப்படுகிறது.

 

மஹ்ர் என்பது எந்த அடிப்படையில் பெண்ணின் உரிமையாக பாதுகாப்பாக கருதப்படுகிறது? மணக்கொடையாக கொடுக்கப்படும் பணம் பெண்ணிடம் இருப்பதால் எதிர்காலத்தில் மணமுறிவு ஏற்பட்டாலோ, வேறு வகைகளில் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அந்த பணத்தைக் கொண்டு தன் எதிர்காலத்தை பெண் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் அடிப்படையிலேயே இதை பெண்ணுக்கான உரிமை, பெண்ணுக்கான பாதுகாப்பு என்பனபோல் விதந்து கொள்ளப்படுகிறது. ஆனால் மரபு வழி வழக்கம் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை என்பதை குரானும், ஹதீஸ்களும் தெளிவாகவே நிருவுகின்றன.

 

….. அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். குரான் 4:4

…… மஹ்ரை பேசி முடித்தபின் அதை கூட்டவோ அல்லது குறைக்கவோ இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மீது குற்றமாகாது ….. குரான் 4:24

 

இந்த வசனங்களில் முதல் வசனம் மஹ்ர் கொடுத்து திருமணம் முடிந்தபின் அதை செலவு செய்வதற்கு அனுமதிக்கிறது. இரண்டாம் வசனமோ திருமணத்திற்கு முன்னரே இருவரும் பேசி தேவைப்பட்டால் கூட்டி குறைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இங்கு மஹ்ரின் நோக்கம் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பாக இருந்தால் அதை செலவு செய்வதற்கும், கூட்டிக் குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கியது என்ன பொருளில்?

 

“(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். ……. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார் “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். முஸ்லிம் 2785

 

திருமணம் முடிக்க தன்னிடம் மணக்கொடையாக எதுவுமில்லை என்று கூறும் ஒருவரிடம் முகம்மது ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாரும் எனக் கேட்க. அதுவும் இல்லை என்று தன்னுடைய ஆடையில் பாதியை கிழித்து தரட்டுமா என்றவர் வினவ, உனக்கு குரான் வசனங்கள் தெரியுமா என்று முகம்மது கேட்க, தெரியும் என்றதும் அந்த வசனங்களை இவளுக்கு கற்றுக் கொடுப்பது தான் நீ கொடுக்கும் மணக்கொடை என்று கூறி திருமணம் செய்து வைக்கிறார். இதுதான் நீண்ட அந்த ஹதீஸின் சுருக்கம். இந்த மணக்கொடையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது பெண்ணுக்கு? இது மட்டுமா? பேரீத்தம்பழம், காலணியைக் கூட மஹ்ராக கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவைகள் பெண்ணுக்கு என்னவிதமான எதிர்கால பாதுகாப்பை வழங்கும்?

 

ஆக, மஹ்ர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்பது அந்தக் காலத்தில் இருந்து முகம்மதால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடைமுறை வழக்கம். இதைத்தாண்டி அதில் பெண்ணின் உரிமையோ, சமூகப் புரட்சியோ இருப்பதாக யாரும் கூறக் கேட்டால் ஒருமுறை சப்தமாக சிரித்துக் கொள்ளலாம். அதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

28 thoughts on “அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

 1. அருமையான விளக்க கட்டுரை.
  இந்த கொடுமைகளால் இந்தியாவில் முதிர் கன்னிகள் ,அரபுலகில் முதிர்கண்ணன்கள்.

 2. ///‘ஷிகார்’ எனும் திருமண முறையை தடை செய்வதாக குரான் பேசுகிறது. கொண்டு கொடுக்கும் திருமண முறைக்குத் தான் ஷிகார் என்று பெயர். ஏன் இதை தடை செய்கிறது என்றால் இரண்டு பக்கமும் மஹ்ர் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக மஹ்ரை நீக்கிக் கொள்கிறார்கள் என்பதால், மஹ்ர் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனும் அடிப்படையில் ஷிகார் திருமணத்தை தடை செய்கிறது/////
  குர்ஆன் சிஹார் திருமணத்தை தடை செய்வதாக யாரிடம் பேசியது?
  புகாரியில் நபி வழி செய்தி மகர் நிர்ணயம் பண்ணாமல் கொண்டு கொடுத்தல் செய்வதையே தடை செய்கிறது.இரு பெண்களுக்கும் தனித்தனியே மகர் நிர்ணயித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறது.இதுவே செங்கொடியின் இந்த கேள்விகளுக்கு பதிலாக விளங்குகிறது.
  ///1. இஸ்லாம் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா? 2. உரிமையை முன்னிட்டுத் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா?//
  பெண்ணுக்கு பெண் சரி மாப்பிள்ளைக்கு மாப்பிளை சரி என்று பாலன்ஸ் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு பெண்களுக்கும் தனி தனியே மகர் நிர்ணயித்து திருமணம் செய்வதைஅதாவது மகர் நிர்ணயித்து சிஹார் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.இரண்டு பெண்களுக்கும் தனித்தனியே அவர்களது உரிமையின் படி மகர் கிடைக்கப் படவேண்டும் என்பதையே இஸ்லாம் இங்கு வற்புறுத்தியுள்ளது.
  ///எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு./////
  எகிப்தில் மட்டுமில்லை ,சவுதியிலும் இந்நிலைமை உள்ளது .ஆனால் இவற்றினை ஆணாதிக்க சிந்தனையும் ,ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக ஏற்படுத்தும் விளைவு என்று எப்படி கூறமுடியும்?

 3. .

  நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை. எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

  “The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

  வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

  “பெண்களை மிகவும் பிடிக்கும்” என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

  நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

  என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
  Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
  …The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”

  (அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

  ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
  இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கரா”வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

  அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?

  எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

  அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்? நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை. அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன் நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.

 4. ////எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் திருமணத்திற்கு பொருள் சேர்ப்பதற்காகவே இளமையைச் செலவழிக்கும் முதிர்கண்ணன்கள் நாற்பதைக் கடந்தும் இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவில் நிகழும் கொடுமைப்படுத்தலும், கொலை புரிவதும் அந்த நாடுகளில் இல்லை. இது வரதட்சனை, தனதட்சனை வித்தியாசத்தால் நேர்ந்ததல்ல, ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு.////

  செங்கொடி ,முதிர்கன்னிகள் ஏற்படாமலிருக்க குர்ஆன் 4;4
  முதிர் கண்ணன்கள் ஏற்படாமலிருக்கவே கீழ்கண்ட ஹதீத்
  “(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். ……. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார் “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். முஸ்லிம் 2785.

  உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் முஸ்லிம்களிடம் இருக்கிறது? ஆணாதிக்கமில்லாமல் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும்?
  ///பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. ///
  இதற்கு மாற்று தீர்வுகள் என்ன?அதை நீங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுத்தி காட்டி வருகிறீர்கள்?

 5. ஸனாதிக்கா செங்கொடி அவர்களே,

  மெஹர் பற்றி ஒரு கட்டுரை என் நண்பன் எழுதி பிரசுரித்திருந்தேன். அது வேறொரு பார்வையை தருகிறது
  மெஹர் என்பது என்ன?

  இப்போது

  காக்காவலிப்பில் கடவுளை பார்த்த கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

  என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
  அதனையும் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

 6. முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

  நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய, ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.

 7. //ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய, ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.//
  உங்களுக்கு புரியுது, அவங்களுக்கு புரியவில்லையே 🙂

 8. ///“The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.
  Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
  …The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”///
  நான் நாத்திகன் ,முதல் ஹதிதுக்கு நம்பகமான ஹதித் என்று போட்டுள்ளீர்கள் .அது போல் இரண்டாவது கூறியுள்ள ஹதின் தரம் பற்றி வாய் மூடி உள்ளீர்கள்? இது பலவீனமான ஹதித் என்பது தெரிந்தும் மறைதுள்ளீர்களா?

 9. ///முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.///
  நான் நாத்திகன் ,சம காலத்தில் உலகம் முழுவதும் இதுபோன்று திருமணம் நடந்துள்ளது.அதை மறுக்க நாதி இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பாட்டை படிக்க வேண்டாம்,.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள்.
  ///உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் முஸ்லிம்களிடம் இருக்கிறது? ஆணாதிக்கமில்லாமல் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும்?
  ///பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. ///
  இதற்கு மாற்று தீர்வுகள் என்ன?அதை நீங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுத்தி காட்டி வருகிறீர்கள்?/////
  நான் நாத்திகன் செங்கொடி வாய் திறக்க மறுக்கிறார்,உங்களது நாத்திக கோட்ப[ஆட்டில் பதில் சொல்லுங்கள் .மழுப்ப மீண்டும் ஆயிஷா [ரலி]திருமணம் பற்றி ஆரம்பிக்காதீர்கள்.

 10. சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன. எனவே அன்று அண்ணல் முகமது செய்தது சரிதான்!!!

 11. ////சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன.///
  அவற்றுக்கு தணடனைகள் உண்டு

 12. //அவற்றுக்கு தணடனைகள் உண்டு// ஆனால் இதே தவறுகளை இறைத்தூதர் செய்தால் தண்டனை இல்லை.

 13. //.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள்.//

  ஒரு செயலை தடுப்பவர் அதே செயலை செய்வாரேயானால் அவரை எப்படி முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியும். என்னய்யா இது வேடிக்கையாக இருக்குது.

 14. kalai////ஒரு செயலை தடுப்பவர் அதே செயலை செய்வாரேயானால் அவரை எப்படி முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியும். என்னய்யா இது வேடிக்கையாக இருக்குது.///
  திருத்திக் கொள்ளுங்கள் ஒரு செயலை தடுத்து பிறகு செய்யவில்லை ஒரு செயலை செய்து அது தவறு என்று புலப்படும் பொழுது தடை செய்யப்பட்டது.
  முதலில் மது அருந்திய மக்களிடம் அதை அனுமதித்து பிறகு தடை செய்தார்கள்.பால்ய விவாகம் நடந்த உலகில் அதனடிப்படையில் திருமணம் செய்தவர்கள் பிறகு பால்ய விவாகம் தடை செய்ய வழி வகுத்தார்கள்

 15. واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي لم يحضن واولات الاحمال اجلهن ان يضعن حملهن ومن يتق الله يجعل له من امره يسرا

  Yusuf Ali: Such of your women as have passed the age of monthly courses, for them the prescribed period, if ye have any doubts, is three months, and for those who have no courses (it is the same): for those who carry (life within their wombs), their period is until they deliver their burdens: and for those who fear Allah, He will make their path easy.
  65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

  ஆகவே நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சாமியாடி, மாதவிடாயே ஏற்படாத சிறுமிகளை விவாகரத்து செய்வதற்கு கூட என்ன செய்யணும்னு சொல்லிக்கிறார்.

  ஆனால் சிறுமிகளை திருமணம் செய்வதை நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா தடை செய்தார் என்று இப்போதைக்கு நம்ம இபுராஹிம் தக்கியா செய்கிறார்.

  அவருக்கு ஆறுவயசில் பொண்ணு இருக்கான்னு தெரியலை.

  எது இருந்தாலும் நான் கடவுள்கிட்ட பேசறேன்.. உன் பொண்ணை எனக்கு நிக்கா பண்ணிவையின்னு யாராவது காக்காவலிப்பில் உளறினால், உடனேநம்ம இபுராஹிம் தன் பொண்ணை அந்த அறுபது வயது கிழத்துக்கு நிக்கா பண்ணி வைத்துவிடுவார். சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?
  எல்லா நபிவழியில்தான்.

 16. //சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?// நானும் செய்தித்தாளில் படித்திருக்கிறேன். இது ஏதோ அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் மாதிரியே தெரியுதே. அல்லா இதையெல்லாம் அனுமதிக்கிறாரா?

 17. இ.ச.///மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், ///

  சிறுமிகள் என்ற வார்த்தை மூலத்தில் எங்கு உள்ளது? யூசுப்அலி மொழியாக்கத்திலும் எங்கு உள்ளது ? வெங்காயமே !கிறுக்குத்தனமாக உளரும் சாக்கடையே!
  65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

 18. //வெங்காயமே !கிறுக்குத்தனமாக உளரும் சாக்கடையே!// இப்போதுதான் இவர் ஒரிஜினல் இஸ்லாமியர் போல பேச ஆரம்பித்திருக்கிறார்.

 19. இதென்ன பிரமாதம்.
  தான் காக்காவலிப்பில் உளறுவதையெல்லாம் கடவுள் சொல்கிறார் என்று நம்பாதவர்களை எல்லாம் காக்காவலிப்பிலேயே திட்டி தீர்த்திருக்கிறார் நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா.

  அதே நபிவழியில் ஈமானை பரப்பும் இபுராஹிமை பார்த்து நான் புல்லரிக்கிறேன்.

  ஊ அல்ல.

 20. தனது பொய்களுக்காக வெட்கபடாமல் வெங்காயம் சாக்கடையில் விழுந்ததுக்கு வருத்தப்படுவானேன்?

 21. //மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், // என்ற வார்த்தையை ”மாதவிடாயே ஏற்படாத குடுகுடு கிழவிகளுக்கும்” என்று விளக்கம் என்று தவ்ஹீத் அண்ணன் பாணியில் போட்டு தாக்குங்கள் இபுராஹிம் சகோ.

 22. //S.Ibrahim, on ஜனவரி26, 2012 at 8:04 மாலை said:
  ////சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன.///
  அவற்றுக்கு தணடனைகள் உண்டு
  Robin, on ஜனவரி27, 2012 at 7:11 AM said:
  //அவற்றுக்கு தணடனைகள் உண்டு// ஆனால் இதே தவறுகளை இறைத்தூதர் செய்தால் தண்டனை இல்லை.////

  ராபின் ஒரு உளறல்; பேர்வளி

 23. ///அவற்றுக்கு தணடனைகள் உண்டு// ஆனால் இதே தவறுகளை இறைத்தூதர் செய்தால் தண்டனை இல்லை.////

  ராபின் ஒரு உளறல்; பேர்வளி//

  நல்ல சமாளிக்கிறீங்க !

 24. //ராபின் சரியான குழப்பவாதி// நீங்க குழம்பிப் போயிருக்கீங்கன்னு தெரியுது. இனிமேல் தெளிவு பிறக்கும்.

 25. வாழ்த்துகள் செங்கொடி தொடரட்டும் உங்கள் பணி நான் ஒரு முஸ்லிம் இன்று முதல் முன்னாள் முஸ்லிம் ஆகிறேன்

 26. நான் பார்த்த இணைய தளங்களில் கருத்தியல் ரீதியான இவ்வளவு மட்டகரமான இது போன்ற ஒன்றை காணவில்லை. எதுவித ஆழ்ந்த தேடல்கள் புரிதல்கள் எதுவுமின்றி கட்டுரைகள் உள்ளன. மனநோயாளிகளும் இணைய தளங்கள் நடாத்துகிறார்கள் என்பதை உங்களைப் போன்றோர்களை வைத்துதான் கண்டு கொள்ளலாம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s