அறியப்படாத தமிழகம்

முன்னுரையிலிருந்து .. .. ..

இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் ‘தம்மளவில் முழுமையானவை’ என நான் கூற வரவில்லை. இவை சிந்திப்பதற்குறிய சில களங்களை நோக்கி கைகாட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வை விட ‘விற்பனை உணர்வே’ சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும், தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது விஞ்ஞானக் கண்ணால் திரைப்படத் துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறம் நுகர்வியம் எனும் வாங்கும் உணர்வை தகவல் தொடர்பு சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன்.

.. .. .. கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தாம், என் வளர்ப்புக்கும், கல்விக்கும், வாழ்வுக்கும், பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என தேடல் மனிதனை நோக்கியே.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்