மோடி பேச்சின் நஞ்சு

உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பில்கிஸ் பானு பேசுகிறேன்

எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட … பில்கிஸ் பானு பேசுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை?

செய்தி: கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் … எது வன்முறை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை … கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளதைச் சொன்னால் கைதா?

தீஸ்தா செதல்வாட், முகம்மது சுபைர் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது ஐ.நா வரை பேசு பொருளாகி இருக்கிறது. அறிவுத் துறையினர் தொடங்கி முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்து விட்டனர். அரசு வாய் திறக்கவில்லை. பதில் கூறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இது முதல் முறையும் அல்ல. ஆனந்த் டெல்தும்ப்டே தொடங்கி வரவரராவ் ஊடாக ஸ்டென்சாமி வரை கைது செய்திருக்கிறார்கள். வரவரராவ் பிணையில் வெளி வருவதற்கு தலை கீழாக நின்று … உள்ளதைச் சொன்னால் கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருப்புப் பாதை போராட்ட இழப்பு(!)

செய்தி: .. .. .. போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், பல ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் … நெருப்புப் பாதை போராட்ட இழப்பு(!)-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்

நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு … அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனீஸ் கைதை முன்னிட்டு .. ..

கடந்த திசம்பர் 29 ம் தேதி கோவையில், இஸ்லாமியராகப் பிறந்த நாத்திகரான அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தை விமர்சித்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டது தொடர்பாக இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வரை பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். கருத்துரிமைக்கு எதிரான கைதாக இதை பலரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் முஸ்லீம்கள் என்ற பெயரில் இயங்குவோர்கள் இந்த கைதுக்கு எதிராக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். கருத்துரிமை என்பது இந்தியாவைப் பொருத்தவரை ஏட்டுச் … அனீஸ் கைதை முன்னிட்டு .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்

அரச பயங்கரவாதம் எனும் சொல் நாளுக்கு நாள் இயல்பாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான எடுத்துக் காட்டுகளை நம்மால் நாளிதழ்களில் காண முடியும். அவற்றுள் பல விபத்துகளாக, நோய்களால் ஆனதாக, தனிப்பட்ட பகைகளாக, திடீர் நிகழ்வுகளாக, ஏன் இயற்கை பேரிடராகக் கூட வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ராம்குமார் கொலையும் சிறையில் நடந்த தற்கொலையாக காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் .. .. ? அது அரச பயங்கரவாதத்தின் விளைவு என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணங்கள் … ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.