ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சனாதனம் எனும் நஞ்சு

ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?

இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.