ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்

அரச பயங்கரவாதம் எனும் சொல் நாளுக்கு நாள் இயல்பாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான எடுத்துக் காட்டுகளை நம்மால் நாளிதழ்களில் காண முடியும். அவற்றுள் பல விபத்துகளாக, நோய்களால் ஆனதாக, தனிப்பட்ட பகைகளாக, திடீர் நிகழ்வுகளாக, ஏன் இயற்கை பேரிடராகக் கூட வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ராம்குமார் கொலையும் சிறையில் நடந்த தற்கொலையாக காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் .. .. ?

அது அரச பயங்கரவாதத்தின் விளைவு என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணங்கள் எளிதாக மக்கள் பார்வைக்கு கிடைத்துவிடவில்லை. பகுதி பகுதியாக போராடி கிடைக்கப் பெற்றவை. சில ஆண்டுகள் பிடித்தவை. இப்போது அவை மொத்தமாக 700க்கும் அதிகமான பக்கங்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதை செயல்படுத்திக் காட்டியிருக்கும் நண்பர் திலீபன் மகேந்திரனின் இந்த முயற்சி அளப்பரியது. மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் திலீபன் மகேந்திரன்.

படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்

மின்னூலாக (பிடிஎஃப்)பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்