புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்

புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் பாஜக அரசு மூன்று சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த நாளிலிருந்து அதற்கெதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ‘தில்லி சலோ’ போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள். திரும்பப் பெறாமல் திரும்ப மாட்டோம் என்று தீரத்துடன் போராடி வரும் அந்தப் போராட்டத்தால் மக்கள் எழுச்சியடைந்து வருகிறார்கள்.

அந்தச் சட்டம் குறித்து, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் விளக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெ.சண்முகம் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த சிறு வெளியீட்டை கொண்டு வந்திருக்கிறது. தரவுகளோடும், எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்திலும் எழுதப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

பின் அட்டையில்

நிலமும் வேளாண்மையும் கார்ப்பரேட்டுகள் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் மிக மோசமான நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். நிலத்தை இழக்கும் விவசாயிகள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் அவலம். அங்கு ஒரு கௌரவமான வேலையை அவரால் தேடிக் கொள்ள முடியாது. விவசாயி என்ற கௌரவத்துடன், சுயமரியாதையோடு வாழ்ந்த மனிதன் உயிர்வாழ்வதற்காக கிடைக்கும் வேலையில் தன்னை இருத்திக் கொள்வது என்பது எவ்வளவு கொடுமையானது. விவசாயத் தொழிலாளர்களின் நிலையோ அதை விட மோசமாகும். விவசாயத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே கிடைக்கும் வேலையும் இல்லாமல் போகும்.

படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்