பார்ப்பனிய பயங்கரம் எல்லா இடங்களிலும் புகுந்து தன் பொய்களை கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. காடாத்துணியில் வடிகட்டிய பொய்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலதனம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் வந்த பகிரி (வாட்ஸ்ஆப்) செய்தி ஒன்று, அய்யன்காளி சனாதனம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை புரட்டுவதிலும் திரிப்பதிலும் ‘சங்கிகள்’ முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் என்றாலும், சாதிப்படிநிலைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய அய்யன்காளியை அதற்கு நேர்மாறாக சனாதனத்துக்காக பாடுபட்டவர் என்று கூறுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் நிர்மால்யாவின், “மகாத்மா அய்யன்காளி – கேரளத்தின் முதல் தலித் போராளி” எனும் இந்த நூல் அய்யன்காளியின் வரலாற்றையும், அவர் எதற்கு எதிராக போராடினார் என்பதையும் தெளிவாக விளக்குகிறது.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்