மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை

நந்தன் யார்?

என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த நூல்.

நூலிலிருந்து .. .. ..

நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை, ஒரு பண்ணை அடிமையின் கதையாக திருத்தி எழுதுவது சாத்தியமா என்று யாராவது கேட்கக் கூடும். புத்தனையே விஷ்ணுவின் அவதாரம் என்று பொய்க்கதை கட்டியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை. புத்தனைப் பற்றி இந்துக்கள் ஏற்படுத்தி வைத்துள்ள பொய்க்கதைகள் என்ன என்பதையும், நந்தன் கதையை ஆராய்ந்த மார்க்சிய அறிஞர்கள் கூட எப்படி உண்மையை காணத் தவறினார்கள் என்பதையும் பார்த்தால் பிராமணக் கருத்தியலின் சூழ்ச்சி நமக்குத் தெரியவரும்.

படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்