
இந்நூல், உலகெங்கும் பரவியுள்ள கொடூரமிக்க, பாதாள உலகத்தின் வழியே அதிர்ச்சியூட்டும் சுற்றுலாவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு விரிவான விவரணை. அங்கு சிவப்புச் சந்தையில் உடலுறுப்புகள், எலும்புகள், உயிரோடிருக்கும் மனிதர்கள் முதலியவை வாங்கி விற்கப்படுகின்றன.
மனித உடல்களையும் உடல் பகுதிகளையும் கொண்டு நடக்கும், அதிக லாபம் ஈட்டித்தரும் தீவிரமிக்க, இரகசியமான வணிகம். இதைத் தொடர்ந்து செல்வதில் ஐந்து ஆண்டு காலம் களப்பணி செய்திருக்கிறார் புலனாய்வு பத்திரிக்கையாளரான ஸ்காட் கார்னி அது ‘சிவப்புச் சந்தை’ என்று அறியப்படும் பரந்தகன்ற இரகசியப் பொருளாதாரம். அங்கு திடுக்கிட வைப்பதிலிருந்து, ஏளனத்துக்குறியது வரை, அதன் பலவித வடிவங்களை அவர் கண்டறிகிறார்.
கிட்னிவாக்கம் என்று பட்ட்ப் பெயரிடப்பட்ட ஓர் இந்தியக் கிராமம் – ஏனென்றால் அங்கு வாழும் பெரும்பான்மையினர் தங்களுடைய சிறுநீரகங்களை பணத்திற்காக விற்பனை செய்திருக்கின்றனர்.
மனசாட்சியற்ற கல்லரைத் திருடர்கள் – மேலைநாட்டு மருத்துவப் பள்ளிகளிலும் ஆய்வகங்களிலும் உடலியல் படிப்புக்கு பயன்படுத்தப்படும் எலும்புக் கூடுகளுக்காக இடுகாடுகளிலும், பிணவறைகளிலும், எரிசிதைகளிலும் மனித எலும்புகளைத் திருடுகின்றனர்.
ஒரு புகழ்பெற்ற பழமையான கோவில் – அதன் பக்தர்களின் முடியை அமெரிக்காவில் விக் செய்பவர்களுக்கு விற்று ஆண்டுதோறும் ஆறு மில்லியன் டாலர் அளவுக்கு பணம் பண்ணுகிறது.
இந்த பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரகசிய வணிகத்தின் வரலாறு வழியாக ‘சிவப்புச் சந்தை’ அதன் எழுச்சி, வீழ்ச்சி, புத்துயிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதன் விவரிப்புகள் தொடக்ககால மருத்துவ ஆய்வு, நவீன பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் தொடங்கி வறுமையால் பாழ்பட்ட யுரேசிய கிராமங்கள் உயர் தொழில்நுட்ப மேலைநாட்டு ஆய்வகங்கள் வரை உடல் திருடர்கள், வாடகைத் தாய்கள் தொடங்கி எலும்புக் கூடு வியாபாரிகள் உயிர் வாழ்வதற்காக தங்கள் உடல்களை விற்கும் ஏழைகள் வரை நீள்கின்றன.
அந்தச் சந்தை மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்ளூர் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதேசமயம் அறிவியல் முன்னேற்றங்கள் மனித திசுக்களுக்கு அதிக தேவையை உருவாக்கியுள்ளன. தசை நாண்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றோடு பெண்களின் கருப்பைகளில் இருக்கும் இடத்தை வாடகைக்கு எடுப்பதில் கூட. ஆனால் சதை-இரத்த வணிகத்தின் இயற்கூறாகவே இருக்கும் அறவியல் சிக்கல்களைப் பரிசீலிப்பதற்கு அறிவியல் ரீதியான எந்த இடமும் கொடுக்கப்படவில்லை. இது மாறிமாறி துயரமிக்கதாகவும், முனைப்பற்ற பார்வையாளராக ஆக்கக் கூடியதாகவும் சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கிறது. ‘சிவப்புச் சந்தை’ நன்கு அறியப்படாத ஓர் உலகளாவிய தொழில், அது நம் எல்லோரின் வாழ்கையிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விசித்திரமான ஒரு பார்வையாகவும் வியப்பூட்டும் செய்தியாகவும் இருக்கிறது.
படியுங்கள் .. .. பரப்புங்கள்.