மாமேதை ஏங்கல்ஸ்

28 நவம்பர் 2019. இந்த நாளிலிருந்து மாமேதை ஏங்கல்சின் 200வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிசம் குறித்தும், மார்க்சிய ஆசான்கள் குறித்தும் அறிந்து கொள்ள, உலகம் புதிய உத்வேகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட மறைக்க முடியவில்லை. ஆங்காங்கே மார்க்சிய படிப்பு வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ஏங்கல்சின் படைப்புகளில் ஒன்றான ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. … மாமேதை ஏங்கல்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி

சில வாரங்களுக்கு முன் நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் இரண்டு வயதே ஆன சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்து, அதிலேயே சமாதியும் ஆகிப் போனான். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தும், விழும் குழந்தைகளைக் காப்பாற்ற தனிப்பட்ட கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஓர் ஒப்பீட்டுக்காக செவ்வாய்க்கு ராக்கெட் விடும் அரசால், ஆழ்துளையில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வழி காண முடியாதா? எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது, அது சமூக வலை தளங்களில் பரவலாக … ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி-ஐ படிப்பதைத் தொடரவும்.

என் சொத்தை எவண்டா விற்பது?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எனும் மோசடி, காங்கிராசால் தொடங்கி வைக்கப்பட்டு பாஜகவில் வாஜ்பேயி வழியாக இன்று மோடியிடம் புதிய விரைவு பெற்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரம் என்று வாயில் வடை சுற்றிய மோடி, இன்று நடப்பு பொருளாதார அலகான 2.7 டிரில்லியனில் நீடிக்க வைப்பதற்கே தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதற்காகத் தான் வேக வேகமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தள்ளும் ஊதாரியாக மோடி காட்சி … என் சொத்தை எவண்டா விற்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

IITகளில் என்ன நடக்கிறது?

முனைவர் வசந்தா கந்தசாமி முனைவர் வசந்தா கந்தசாமி. 130 தலைப்புகளில் நூல்கள் வெளியீடு, 600 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும் IIT-Mன் ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர் வசந்தா கந்தசாமி சென்னை ஐஐடி யில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படுத்துகிறார். மனுநீதி தான் அங்கே கோலோச்சுகிறது, ஜனநாயகம் என்பதே இல்லை. கருப்பாக இருக்கும் யாரும் அங்கே படித்து தேர்ச்சி பெற முடியாது. இதுவரை ஒரு கண்டுபிடிப்பு கூட அங்கிருந்து வெளியாகவில்லை. பேராசிரியர்களாய் இருப்போரின் … IITகளில் என்ன நடக்கிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது தான் பார்ப்பனியம்

பார்ப்பனியம் (உள்ளுக்குள் பயந்து கொண்டேனும்) எகிறி அடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஐஐடி மாணவி தற்கொலைக்கு தூண்டப்பட்டது, சிதம்பரம் கோவில் பக்தை பூசாரி ஒருவனால் கன்னத்தில் அறையப்பட்டது என அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிர்வினை என்ன? என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்ப்பனியம் குறித்து மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? எனும் கேள்வி இன்றியமையாதது. ஐயா தொ.பரமசிவன் அவர்களின் இந்த சிறு நூல் பார்ப்பனியம் குறித்த புரிதலை ஏற்படும் கையேடாக இருக்கும். படியுங்கள். … இது தான் பார்ப்பனியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியம் மட்டுமே தீர்வு

இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?

இட ஒதுக்கீடு, பெரியார், தகுதி போன்றவை குறித்து தெரிந்திருக்காத இன்றைய பதின்ம வயதினருக்கு அவை குறித்த ஒரு அறிமுகத்தை பொட்டில் அடித்தாற் போல் புரிய வைக்கும் ஓர் எளிய குறும்படம். திருவள்ளுவரை காவியாக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிசங்களுக்கு வாலை நசுக்கும் ஆப்பறைய, இது போன்ற நிறைய குறும்படங்கள் பல தலைப்புகளில், பல அரசியல் விவரங்களைத் தாங்கி வர வேண்டும். அது இன்றைய பதின்ம வயதினருக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டும். நக்கலைட்ஸ் குழுவினருக்கு பாராட்டுதல்கள். மகிழ்ச்சி. பாருங்கள். பகிருங்கள். … பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.