அண்மையில் “The Indian Kitchen” எனும் மலையாளப் படம் வெளிவந்த பின்னிலிருந்து சமூக தளங்களில் பெண்ணியம் சார்ந்து பலரும் பதிவுகள் இட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், சமையல் குறித்து மட்டுமே பேசுவது, ஒரு விதத்தில் பெண்ணை இழிவுபடுத்துகிறதோ என்றும் தோன்றுகிறது.
ஏனென்றால், வரலாற்றில் மிக நீண்ட காலம் மனித குலத்துக்கு தலைமை தாங்கி, சமூகத்தை வழிநடத்தியவள் பெண். மருத்துவம், விவசாயம், கட்டடக்கலை என பல துறைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி சமூகத்தை வளர்த்தெடுத்தவள் பெண். இந்த வரலாற்றை சமையலறையுடன் ஒப்பிட்டால் டைனோசர்களை கொசு விழுங்குவதற்கு ஒப்பானது.
ஆனால், இன்றைய பெண்களின் நிலை.. .. ..? பெண்களின் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த ஆணிய உலகம் புரிந்து கொள்வதற்கே இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
’சரிநிகர்’ இதழில் 90களின் முற்பகுதியில் பெண்ணியம் சார்ந்து வெளியான சில கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
நூல் குறித்து முன்னுரையில்,
இது வரன்முறையான ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இல்லாதிருப்பினும், தமிழில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வையும், சிந்தனைத் தேடல்களையும், தெளிவுகளையும் தரமுற்படுகிறது என்பதில் ஐயமில்லை.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்