பிற்காலச் சோழர்கள் என்று கூறியதும் தற்போது இணையப் பரப்பில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தானா இல்லையா எனும் விவாதம் தான் நினைவில் வருகிறது.
மறுபக்கம் பேராசான் மார்க்ஸ் முன்வைத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் எனும் முடிவில் மாற்றங்கள் தேவையா என்பதும் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் ஆசியபாணி சொத்துடமை வடிவத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ் கூட இறுதியில் ஆசிய பாணி சொத்துடமை வடிவம் குறித்து மீளாய்வு தேவை எனும் கருத்து கொண்டிருந்தார் என்பதற்கான குறிப்புகளும் கிடைக்கின்றன.
அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த வரலாற்றியல் ஆய்வாளரான நெபுரு கராஷிமா வெளிப்படுத்திய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இந்த நூல். இந்நூலில் கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையில் வரலாற்று விவாதங்களுக்கான பதில் கிடைக்கும்
படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்