தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி அடையாளம் என்பதைத் தாண்டி அதற்கு வேறு தனித்தன்மைகள் இருக்கிறதா? தேசியப் பறவை மயில் என்பதைப் போல, தேசிய விலங்கு புலி என்பதைப் போல, தேசியக் கொடி மூநிறக் கொடி. ஆனால் விடுதலை நாளை அடையாளப்படுத்த கொடி எளிமையாக இருக்கிறது என்பதால் அது பயன்படுத்தப்படுகிறது. இதை கட்சி சார்ந்து பாஜக தனக்கான அடையாளமாக மாற்ற முற்பட்டது தான் இந்த ஆண்டில் நடந்திருக்கிறது.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை. தேசியச் சின்னங்களை தனி ஒரு கட்சிக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்யக் கூடாது. ஆனாலும் பாஜகவுக்கு தேர்தல் கமிசன் ஒதுக்கியது. இன்று தாமரை தேசிய மலர் என்பதை விட பாஜகவின் சின்னம் என்று ஆகியிருக்கிறது. இதேபோல் கொடியையும் மாற்றும் முயற்சி தான் மோடியால் அறிவிக்கப் பட்ட வீடுதோறும் கொடி ஏற்றுங்கள் எனும் அறிவிப்பு. நாடெங்கும் பாஜக குண்டர்கள் சிறு கடைகளை, வீடுகளை, சிறு நிறுவனங்களை கொடியேற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். கொடி ஏற்றாதவர்கள் தேச விரோதி என்கிறார்கள். அடையாளம் காண்போம் என்கிறார்கள். மறுபக்கம், வீடு தோறும் நியாய விலைக் கடைகள் மூலமாகவும் இன்னும் பிற வழிகளிலும் வற்புறுத்தி விற்பனை செய்யப்பட்ட சல்லடைத் துணி போன்ற கொடியை என்ன செய்வதென்று தெரியாமல் அடுப்பறை உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் க்கும் மூநிறக் கொடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றுவரை அதை தேசியக் கொடியாக ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதும் இல்லை. காவிக் கொடியையே தேசியக் கொடியாக கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அன்று காங்கிரசுக்குள் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களும் இதற்கு முயற்சித்தார்கள். இந்த எல்லா முயற்சிகளையும் மீறித்தான் சுரையா தியாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண் வடிவமைத்த கொடி தேசியக் கொடியாக ஏற்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஆர்.எஸ்.எஸ் இதை தேசியக் கொடியாக ஏற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலர் இதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். தேசியக் கொடியை நிராகரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் 90களில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஒன்றிய அதிகாரத்துக்கு வந்ததும் இந்த முரண்பாடு முன்வருகிறது. பிரதமராக இருப்பவர் தேசியக் கொடியை ஏற்க மறுக்க முடியாது, ஏற்ற மறுக்க முடியாது. இந்த சிக்கல் காரணமாக மட்டுமே தவிர்க்க முடியாமல் தேசியக் கொடியை ஏற்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி ஆர்.எஸ்.எஸ் க்கும் மூநிறக் கொடிக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

கதர் உற்பத்தியாளர்கள் ஓராண்டுக்கு முன்பிருந்தே மரபை மாற்றக் கூடாது என போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேசியக் கொடி குறித்த சட்டம், அது எப்படி இருக்க வேண்டும், எப்படி ஏற்ற வேண்டும், ஏன்னவெல்லாம் செய்யக் கூடாது போன்ற குறிப்புகளை விதிமுறைகளாக வகுத்திருக்கிறது. அதில் முதன்மையான ஒன்று கொடி கதர் துணியில் தான் இருக்க வேண்டும் என்பது. இதை மாற்றி பாலியஸ்டரிலும் இருக்கலாம் என்று கொண்டுவந்து தான் கோடிக் கணக்கான கொடிகள் இந்த முறை உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. உலகின் முன்னணி பாலியஸ்டர் உற்பத்தியாளரான அம்பானியிடம் கொரோனா போன்ற காரணங்களினால் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த இற்றுப்போன துணிகளை கொடி உற்பத்தி என்ற பெயரில் மடை மாற்றி இருக்கிறார்கள்.

அம்பானியின் தொழில் வளத்தோடு, அம்பனியின் சொத்துகளாக இன்று இருப்பவைகளோடு, அம்பானியின் முனைப்புகளோடு ஒப்பிட்டால் தேசியக் கொடி உற்பத்தி கொசுவின் கால் தூசுக்கு நிகரானது. ஆனாலும் ஏன் அதை செய்கிறார்கள்? தேசியக் கொடியையே நாங்கள் தான் தயாரித்துக் கொடுத்தோம் என்று தேசியக் கொடியை தங்கள் விளம்பரச் சின்னமாக பயன் படுத்துவதற்காகத் தான் இருக்க வேண்டும். பிரதமரையே விளம்பர மாடலாக பயன்படுத்தியவர்கள் அல்லவா?

நாட்டின் அனைத்து வளங்களும் தனியாருக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை கண்கூடாக கண்டு வருகிறோம். வாராக்கடன்கள் பத்து லட்சம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது, இன்னும் தள்ளுபடி செய்யப்படவிருக்கிறது. வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனியார் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மறுபக்கம் வரிகள் என்ற பெயரில் மக்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலையும் வரியும் உயர்வு இந்த இரண்டினால் மட்டுமே லட்சக் கணக்கான கோடிகள் உழைக்கும் மக்களிடமிருந்து ஒன்றிய அரசாங்கத்தினால் பறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் சேமநல வங்கி (ரிசர்வ் வங்கி) யின் எதிர்கால கையிருப்பு ஒன்பது லட்சம் கோடி அரசாங்க நிர்வாகச் செலவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் கணக்கிலடங்காத வழிகளில் எல்லாம் மக்கள் பணம் அவர்களின் கோமணங்களிலிருந்து உருவப்பட்டிருக்கிறது. இதை என்ன விதத்தில் விடுதலையாகப் பார்ப்பது?

நாட்டின் வளங்கள் அனைத்தும் பெரு முதலாளிகளுக்கு. இதற்கு முன்னேற்றம் என்று பெயர்.

அந்த வளங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதும் அவர்களின் உரிமை. அவ்வாறு செய்வதற்கான நிதியை மக்களிடமிருந்து திரட்டி அரசாங்கமும், அரசும் அவர்களிடம் கொடுக்கும். அதற்கு வங்கி என்று பெயர்.

அவர்களின் உற்பத்திச் சரக்குகள் நாடெங்கும் தடையின்றிச் செல்வதற்கு தேவையான சாலை, கடல், வான் வழி போக்குவரத்து வதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். இதற்கு உட்கட்டமைப்பு மேம்பாடு என்று பெயர்.

நாடு தாண்டி மட்டுமல்ல பூமி தாண்டியும் அவர்களுக்கு தேவையான வளங்கள் கிடைக்கிறதா என்று மக்கள் செலவில் ஆய்வுகள் செய்யப்படும். இதற்கு அறிவியல் வளர்ச்சி என்று பெயர்.

அவர்கள் தயாரித்துத் தரும் பொருட்களை மக்கள் தங்கள் சொந்த உழைப்பிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பெற்று பயன்படுத்த வேண்டும். இதற்கு நாகரீகம் என்று பெயர்.

மக்களுக்கு வாழ வழியில்லாமல் போனாலோ, அல்லது நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அந்த நிறுவனங்களை எதிர்த்து போராடுவர். அப்போது அரசு அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசாக வழங்கும். இதற்கு சட்டம் ஒழுங்கைக் காப்பது, வன்முறையை தடுப்பது என்று பெயர்.

இவ்வளவுக்குப் பிறகும் இதை ஜனநாயக நாடு என்று அவர்கள் கொண்டாடுவார்கள். ஆதலால் மூநிறக் கொடியை நம்முடைய பணம் 25 ரூபாய் கொடுத்து வாங்கி நம் வீடுகளில் கட்டிக் கொள்வோம். இதற்கு சுதந்திரம் என்று பெயர்.

எனவே, நாம் உரக்க சொல்லிக் கொள்வோம், நாம் 75வது சுதந்திர நாளைக் கொண்டாடுகிறோம் என்று.

தூ .. .. .. பன்றிகளா.

6 thoughts on “தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

  1. தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

  2. நியாயமான பதிவு. ஆனால் பாஜா வை எதிர்க்கும்தமிழ் நாட்டின் திராவிட மாடல் முதலமைச்சர் ரோட நடவடிக்கை என்ன

  3. நல்ல பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்