அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.
கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் சிவப்பு மையை மாற்றி “எரிமலை எப்படி பொறுக்கும், நெருப்புக்கு இன்னுமா உறக்கம்” என்று பொங்குவார். எபோதும் திமுக அனுதாபியாக காட்டிக் கொண்டாலும், எம்ஜிஆர் பரிந்துரையில் கலாச்சாரத் தூதுவராய் ரஷ்யா சென்றுவரும் ரசவாதமும் தெரியும். தான் சாதாரண பாடலாசிரியர் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது நூல்களையும் எழுதிக் கொண்டிருப்பார். தன் வயதின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் நூல்களை எழுதியிருப்பதாக முன்பொருமுறை அவரே ஒரு செவ்வியில் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நூல் தான் “மூன்றாம் உலகப் போர்” அந்த நூலை படிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. (வடிவடக்கத்தில் அழகாகவும், உள்ளடக்கத்தில் குப்பையாகவும் இருக்கும் நூல்களை 500,600 கொடுத்து வாங்க கட்டுபடியாகுமா?) ஆனால் அந்த நூலின் முன்னுரை கடந்த 13/07/2012 அன்று தினமணியில் வாசிக்கக் கிடைத்தது. நூலின் மொத்தத்தையே முன்னுரையில் தந்தது போல் இருந்தது.
புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் மீது தொடுத்திருக்கும் போர் தான் மூன்றாம் உலகப் போர் என்றும், அதற்கு “வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப் பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்” என்பது அதற்கான தீர்வுகளில் ஒன்று என்றும் எழுந்தருளியிருக்கிறார். ஆகா ஒரு கவிஞன் சமூக அக்கரையோடு எழுதியிருக்கும் நூலா எனும் உணர்வின் உந்துதலால் ஆர்வத்துடன் உருப் பெருக்கி கண்ணாடி கொண்டு தேடியும் புவி வெப்பமடைதலை வெகுவாகத் தூண்டும் முதலாளித்துவ தொழில் வளர்ச்சிப் போக்கு குறித்தும், உலகமயமாக்கம் எப்படி வேளாண்மையை வதைக்கிறது என்பது குறித்தும் கொஞ்சமும் இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு சற்றும் பொருத்தமற்று கம்பஞ்சங்கு கண்ணில் விழுந்தது போல் (நன்றி முதல்வன் படப்பாடல் வைரமுத்து) உருத்தலாய் ஒரு விசயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி கடைசியில் பார்க்கலாம்.
விவசாயத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி யார்? அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி தொடங்கி இன்றுவரை விவசாயத்தை கருவறுத்துக் கொண்டிருப்பது எது? கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டியது எது? உலகமயம் தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட்டால்; புவி வெப்பமடைவதும், உலகமயமாவதும் எதோ இயற்கைச் சீற்றம் என்பது போல் கவிதைநடை குழைத்து இலக்கியமாய் சொல்லிச் சென்றால் அது கதைவிடலாக இருக்குமேயன்றி ஒருபோதும் சமூகத்தை பதியனிட்டதாக ஆகாது. புவி வெப்பமடைதலும், உலகமயமாதலும் சேர்ந்து விவசாயத்தின் மீது தொடுத்திருக்கும் போர் தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றால் அதை தொடுத்திருப்பவர்கள் யார்? தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் யாரால், யார் பலனடைவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன? உலமயத்தால் யார் பலனடைகின்றார்களோ அவர்களே விவசாயத்தின் மீது போர் தொடுத்திருக்கிறார்கள். முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம் உள்ளிட்ட விவசாய்த்துக்கு எதிரான திட்டமிடல்களை ஒரு அத்தியாயத்திலேனும், வேண்டாம் ஒரு பக்கத்திலேனும் விவரித்திருக்குமா மூன்றாம் உலகப் போர்.
புவி வெப்பமடைதல் குறித்த பேச்சுகள் எப்போது தொடங்கியது? பசுங்குடில் விளைவினால் கார்பனின் அளவு அதிகரித்திருப்பதே புவிவெப்பமடைவதற்கான முதல் காரணி என்கிறார்கள். க்வெட்டா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்தீர்மானங்களை அமெரிக்கா ஏன் ஏற்க மறுக்கிறது என்பது குறித்து மூன்றாம் உலகப் போரில் ஏதேனும் குறிப்பிடப் பட்டிருக்குமா? இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி தான் குளோரோஃபுளோரோ கார்பன் மிக அதிக அளவில் உற்பத்தி செய்தது; அதனால் தான் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டது. இதற்கும் வேளாண்மையின் அழிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து மூன்றாம் உலகப் போர் ஆராய்ந்திருக்குமா? வெறுமனே ஒரு கிராமத்துக் கதை, பேரு மட்டும் உலகப் போர். கிராமத்து வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று சாராயம் காய்ச்சுவது எப்படி என்று நுணுக்கமாக எழுதியது போல், கிராமத்து விவசாயியின் கதையை கற்பனையாக எழுதி அதன் சர்வதேச கவனம் வேண்டி மூன்றாம் உலகப் போர் என்று பெயர் வைத்திருக்கிறார். இதற்கு முட்டுக் கொடுப்பது போல் வியட்நாமின் நெற்பயிர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை குறித்தெல்லாம் தோரணங்களைப் போல தகவல்கள். ஒருவேளை எலக்கியத்திற்கான சர்வதேச விருதுகளை வளைக்கும் வித்தைகளும் வைரமுத்துவுக்கு அத்துபடி தாமோ.
ஆனால், முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயம் உள்ளிட்டு அனைத்துமே அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து போராடி வரும் வேளையில் உலகமயமும், வெப்படைதலும் இயற்கைச் சீற்றங்கள் என்பது போல் வைரமுத்து கரடி விடுவது ஏன்? முதலாளிகள் உலகின் வளங்களையும், மக்களையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள், அதன் விளைவாகவே மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் விவசாயம் அழிவது என்பதை வைரமுத்து மறைக்க முற்படுகிறார். வைரமுத்து மட்டுமல்ல எல்லா வண்ண அறிவுஜீவிகளும் இதை மறைத்து மக்களை திசை திருப்பவே முயல்கிறார்கள். மூன்றாம் உலகப் போர் இலக்கிய வகையிலான திசைதிருப்பல். சரி, இதை வைரமுத்து ஏன் செய்ய வேண்டும்? தமிழகத்தின் வானவில் கூட்டணியில் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டாரா? இந்த ஐயத்தைத்தான் மேலே குறிப்பிட்ட கம்பஞ்சங்கு எழுப்புகிறது.
மேலைநாட்டு ரஸ்ஸல் தொடங்கி தமிழ்நாட்டு சு.ரா வரை மார்க்கிசியத்தின் மீது அவதூறுகளைப் புனையும் போதெல்லாம், தங்களை மார்க்சியவாதிகளாகவே காட்டிக் கொண்டனர். அதை அடியொற்றித் தான் வைரமுத்துவும் கூட்டுப்பண்ணைகளின் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும் என்கிறார். அதே நேரம் சற்றும் பொருத்தமில்லாத ஒரு பொய்யையும் சந்தடி சாக்கில் அவிழ்த்து விட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து ஹிட்லர் எனும் பாசிச சர்வாதிகாரியிடம் இருந்து உலகை காப்பாற்றியது சோவியத் யூனியன். மட்டுமல்லாது, ஜெர்மனியிடம் பிடிபட்ட 18 ஆயிரம் சோவியத் போர்க்கைதிகளை ஹிட்லரின் ஜெர்மன் அரசு பட்டினி போட்டே கொன்றது வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வைரமுத்து எழுதியிருக்கிறார். சோவியத் யூனியனிடம் பிடிபட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ஜெர்மன் போர்க்கைதிகள் முதல் இரண்டேகால் ஆண்டுகள் விலங்குகள், பறவைகள், எலிகளை தின்று உயிர் பிழைத்தார்களாம், அதன் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல் சக கைதிகளையே உணவாய் திண்ணத் தொடங்கினார்களாம். இப்படி அவர்கள் தின்று தீர்த்தது ஐந்தாயிரம் பிணங்களையாம். மூன்றாம் உலகப் போரை வைரமுத்து மூன்றாண்டுகள் ஆராய்ந்து பத்து மாதங்களாய் எழுதினாராம். இதில் மூன்று வினாடிகள் சிந்தித்திருந்தாலே இவர் எழுதியிருக்கும் கணக்கு எவ்வளவு அபத்தமானது என்பது விளங்கியிருக்கும். .. ம்ம் .. புச்சு புச்சா கிளம்பிடுறாய்ங்க.. .. ..
வைரமுத்து நல்ல கவிஞ்ரா என்று தெரியாது. ஆனால் தம் புத்தகங்களுக்கு நல்ல விலை வைப்பதால் – அவர் நல்ல வியாபாரி என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
உலகமய.தாரளாமய.தனியார் மய கவிஞரை பார்த்துவிட்டேன் அட,அது கோல்டன் முத்துதான் என்பதை புரிந்து கொண்டேன்.
நல்ல அலசல்…
எல்லாமே பணம் தான்…
தொடர வாழ்த்துக்கள்…
நன்றி…
i have not aware about that book. thanks for your share.
ஆனந்த விகடனில் மூன்றாம் உலகப்போர் தொடர் வெளி வந்து கொண்டிருக்கும் போதே ஆ.வி.க்கு வாசகர் கடிதம் எழுதினேன் – அந்தத் தொடரை நிறுத்தி விடும்படி.
அந்தக் கடிதத்தின் சிறுபகுதி கீழே:
பரிந்துரை: 2 ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு இன்னொன்றையும் பரிந்துரைக்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து வைரமுத்து எழுதும் “மூன்றாம் உலகப்போர்” என்னும் நாலாந்தர நாவல் தொடரை உடனே நிறுத்தி விடுங்கள். அவருக்கு நாவல் எல்லாம் எழுத வர வில்லை. அவரிடம் வண்டல் வண்டலாய் வார்த்தைகள் குவிந்து கிடக்கின்றன். ஆனால் துளி கூட வாழ்வியல் தரிசனம் இல்லை.
வெற்று வார்த்தைகளால் உள்ளீடற்ற அலங்கார கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது நாவலுக்குப் போதாது. இதை யாராவது சினிமாவாக எடுப்பார்கள் என்கிற எதிர் பார்ப்புகளுடன் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத நாடகத் தனமான சம்பவங்களால் நாவலை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். அவரை அவரின் முதல் தொடர்கதையான வானம் தொட்டுவிடும் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் என்பதின் நகம் தொடக் கூட, அவருக்கு கதை மொழி கைவரவில்லை என்பதை ரொம்பவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடிதத்தை முழுவதும் படிக்க என்னுடைய பிளாக்குக்கு ஒரு விசிட் அடியுங்கள்;
http://www.silviamary.blogspot.com
— சோ.சுப்புராஜ்
வைரமுத்து நல்ல வியாபாரி.
vairamuthu’s kavithaikal,paadalkal-L paaraattukkuriyavai 20%..He is a good kaakaa.
இப்படித் தான், இரண்டு உலகப் போர்களின் எச்சமாகத் தொடங்கி – மூன்றாம் உலகப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் பணமாக்குகிறார்கள், பண்பாளர்கள்.
vairamuthu oru ootru neer. athai kaivittu kalaKkivittu kalangal enpathu ARIVEELIGALIN seyal.
F**k you Idiot…! ippadi naan ungalai thittinaal kopam varum illayaa? Yenakku unnai pidikalai athanaal naan manathukkul appadi thittalaam. Aanaal, oru public form la appadi thittarathu naagarigam illa… Nee vimarsikkaranna, nadunilaimaiyaa irunthu vimarsi… illaati, shut your a*s mouth… nu thittanum nu thonuthu aanaal, naan public ah thitta mudiyaathu nu, manasukulla ye thittikiren… 🙂
நீங்களெல்லாம்தான் நல்லா சிந்திச்சு தரமான படைப்புகளைக் கொடுக்கக் கூடிய அறிவு ஜீவிகளாச்சே! மக்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களை நீங்களே எழுத வேண்டியதுதானே! ஒருத்தன் பணம் சம்பாதிச்சிட்டா உடனே அவனை வியாபாரி என்று சொல்லி ஏளனம் செய்ய வேண்டியது. பணம் சம்பாதிக்க வில்லையென்றால் ஊருக்கு உழைத்தவரை - வறுமையில் வாடியவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அனுதாப அரசியல் செய்ய வேண்டியது!போங்கப்பா … போஙுகு பண்ணாதீங்க. அருள்மொழி