சிவாஜி யார்?

கோவிந்த் பன்சாரே. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ம் தேதி காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய கம்யூனிச தலைவர்களில் ஒருவர். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20ம் தேதி மரணமடைந்தார்.

ஏன் அவர் கொல்லப்பட்டார்? பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கோட்சேவை ஆராதிக்கும் மனோநிலையின் ஆபத்து குறித்து உரையாற்றினார். அப்போது ஏபிவிபி குண்டர்களால் கடுமையாக மிரட்டப்பட்டார். தபோல்கர் கொல்லப்பட்ட போது அடுத்தது நீ தான் என்று மிரட்டல் கடிதம் வந்தது. ஆனாலும் அவரைப் பாதுகாக்க அரசும் காவல்துறையும் எதுவும் செய்யவில்லை.

அவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில், ‘மாவீரன் சிவாஜி. காவித் தலைவனல்ல, காவியத் தலைவன்’ எனும் நூல் முதன்மையானது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு பிம்பமாக பார்ப்பன பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சிவாஜி, உண்மையில் அவ்வாறு இருக்கவில்லை. மாறாக, மக்களை விவசாயிகளை நேசித்த மன்னராக, ஒரு காவியத் தலைவனாக இருந்திருக்கிறார் என்பதை வரலாற்றுப் பார்வையில் இந்நூலில் நிருவுகிறார் பன்சாரே. இது தான் காவிகளை அவரை கொல்வது வரை கொண்டு சென்றது.

பார்ப்பனிய பயங்கரவாதிகள் பொய்களை பரப்பியும், வரலாற்றைத் திரித்துமே தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு சாட்டையடி கொடுக்கும் இது போன்ற நூல்கள் இந்த காலச் சூழலில் மிகவும் இன்றியமையாத தேவையாய் இருக்கின்றன. அந்த வகையில் தோழர் பன்சாரேவின் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த நூல் இதோ உங்களுக்காக.

படியுங்கள். பரப்புங்கள்.

மாவீரன் சிவாஜி: காவித் தலைவனல்ல, காவியத் தலைவன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்