அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்

சாதி தீண்டாமைக் கொடுமைகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுங் காலமாக மக்களின் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியக் கொடுமைகளுக்கு எதிராக புத்தர் தொடங்கி பூலே, அம்பேத்கர், பெரியார் வரை நெடிய போராட்ட வரலாறும் இருக்கிறது. சம காலத்தில் புதிய போக்குகளும் கிளம்பி இருக்கின்றன. பார்ப்பனிய பெருந் தெய்வ புராணக் கதைகளை வரலாறாக மாற்றுருவாக்கம் செய்து நிருவுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பார்ப்பனிய பெருந் தெய்வங்களுக்கு எதிராக கிராமத்து குலதெய்வ வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்து நிருவுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு போக்குகளுமே பார்ப்பனியத்துக்கு துணையாக இருந்து ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்த்துக் கொண்டிருக்கின்றன. வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இது நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அதை குல தெய்வ வழிபாட்டு ஒழிப்பிலிருந்து தொடங்க வேண்டியதிருக்கிறது. இதைத் தான் இந்த நூல் நிருவுகிறது.

நூலிலிருந்து .. ..

.. .. பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களிடம் கூட இவை குறித்து ஒரு மயக்க நிலை காணப்படுகிறது. முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள் பலர் தமிழர் உரிமைக்காகப் போராடுவார்கள், தீண்டாமை ஒழிப்புக்காக போராடுவார்கள், ஏன் ஜாதி ஒழிப்புக்காகவும் களமாடுவார்கள், பன்னாட்டு நிறுவனங்களையும், சர்வதேச சக்திகளையும் கூட எதிர்த்து நிற்பார்கள். ஆனால் தன் குழந்தைக்கு தன் ஜாதியின் குல தெய்வக் கோவிலில் மொட்டை அடித்து காதுகுத்து விழா நடத்துவார்கள். தன் பிள்ளைகளுக்கு சொந்த ஜாதியில், குல தெய்வத்தின் அடிப்படையில் திருமண உறவுகளை மேற்கொள்ளுவார்கள். ஜாதி மறுப்புத் திருமணத்தைக் கூட செய்து விடுவார்கள். ஆனால் குல தெய்வ வழிபாடுகளைத் தவிர்க்க மாட்டார்கள். குல தெய்வக் கோவிலுக்கு கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் .. ..

படியுங்கள், பரப்புங்கள்.

நூலை மின்னூல் கோப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்