தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்

செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள்.

பதிப்புரையிலிருந்து

புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர்கள் வெளிப்படுகிறார்கள். .. .. ..

இந்துத்துவ பாசிச வெறியாட்டம் நாடெங்கும் காவி-அரசு பயங்கரவாதங்களாக வெளிப்படும் காலத்தில், போராடும் மக்களின் ஒவ்வொரு எதிர்ப்பும் நசுக்கப்பட்டு வரும் காலத்தில், உழவர்கள் வாழ வழியின்றி தற்கொலைக்கு தள்ளப்படும் காலத்தில், போராடிப்பெற்ற ஒவ்வொரு உரிமையாக இழந்து வரும் பாட்டாளி வர்க்கம் புழுங்கிக் கொண்டிருக்கும் காலத்தில், கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களும், எதிர்காலம் மறுக்கப்படும் இளைஞர்களும் போர்க்கொடி ஏந்தி நிற்கும் காலத்தில் புரட்சிகர மக்கள் இயக்கத்தின் தலைவர் தோழர் பாலனின் வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் – புரட்சிகர சக்திகளுக்கும் உத்வேகத்தை வழங்கும். மக்கள் எழுச்சிகளுக்கு திசை வழியைக் காட்டும். .. .. ..

நூலை பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்