மணமக்களை அழைக்காத திருமணம்

புதிய கல்விக் கொள்கையின் அவலங்களை பலரும் விளக்கி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மக்களிடம் கருத்துக் கேட்பதாக படம் காட்டி தன் ஜனநாயகத் தன்மையை நிரூபிக்கப் பார்க்கிறது. எப்படி? மக்களை அழைக்காமல் மக்களிடம் தெரிவிக்காமல், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாமல் கைத்தடிகள் சிலரை வைத்துக் கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்துகிறார்களாம். இது ஒன்றே புதிய கல்விக் கொள்கை மக்களுக்கானது இல்லை என்பதை காட்டுவதற்கு.

இவ்வாறான ஒரு கூட்டம் கோவையில் நடந்த போது தோழர் கு.இராமகிருட்டினன் இதை அறிந்து சென்று தடுத்திருக்கிறார். அதன் காணொளிக் காட்சிகள் தாம் இவை. பாருங்கள். பரப்புங்கள்.

மக்களை அழைக்காத கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்று, இரண்டு, மூன்று,

புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 தமிழாக்கமும் இணைக்கப்பட்டிருக்கிறது. முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

புதிய கல்விக் கொள்கை வரைவு 2019

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்