2020 நாட்காட்டி

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து நாட்காட்டியை வடிவமைத்து வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என பரப்புரை செய்த மாபெரும் குற்றத்திற்காக இரண்டாம் முறையாக சிறைப் படுத்தப்பட்டிருந்ததால் வெளியிட இயலவில்லை. இந்த ஆண்டுக்கான நாட்காட்டி 2020 இங்கு வெளியிடப்படுகிறது. கடந்த முறை, ஒரே மின்னூல் கோப்பாக இருப்பதால் முன்பின்னாக படியெடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என சிலர் தெரிவித்திருந்ததால், இந்தமுறை தனித்தனி மாதங்களாகவும் பிரித்து வெளியிட்டுள்ளேன். ஒரே கோப்பாக வேண்டுவோரும், தனித்தனியாக வேண்டுவோரும் விருப்பப்படி பதிவிறக்கிக் கொள்ளலாம். மீண்டும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

இந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவு என்பதால், கடந்து வந்த பாதையை நினைவுகூரும் வகையில் தொகுத்துள்ளேன். விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யலாம்.

ஏ3 அளவில் வண்ணத்தில் அச்செடுத்து பயன்படுத்திக் கொள்க.

2020 நாட்காட்டி தரவிறக்கம்

2020 நாட்காட்டி – மாதவாரியாக

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்