பாசிசத்தின் இந்திய முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும்.

போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் வழியாகவும் கூட, பாஜக செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கும் உத்தி. இதையும் முறியடிக்க வேண்டிய தேவை தொடர்கிறது என்பது தான் எதார்த்தம். ஏனென்றால், பாஜக ஒரு கட்சியல்ல எனும் புரிதலே பல கட்சிகளுக்கு இல்லை. அந்தப் புரிதலை ஏற்படுத்த இந்த நூல் உதவும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தீகதிர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவருமான தோழர். வே.மீனாட்சிசுந்தரம் எழுதி வெளிவந்தது தான் இந்நூல்.

முகவுரையிலிருந்து,

.. .. .. இன்று மோடி அரசு இந்து ராஷ்டிரம், ஜனநாயக ஆட்சி முறைக்கு வழி போடுதல், ஹிந்தி ஆட்சி மொழி, மாநில சுயாட்சியை நீர்த்துப்போகச் செய்தல் உள்ளிட்டவற்றில் தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தத் துணிச்சகுக்கு அடிப்படை என்ன என்பதை சாதாரண மக்களின் சிந்தனைக்கு படைக்கிறோம்,

பதிப்புரையிலிருந்து,

.. .. .. பொருளாதாரக் கலவரங்களை தீவிரப்படுத்துவதன் மூலமே மதக் கலவரங்களை ஒழிக்க முடியும். மதக் கலவரங்கள் என்பவை ஒரு விதத்தில், ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக நடத்தும் வர்க்கப் போராட்டம் தான், .. .. .. அடித்தள மக்களின் அறவுணர்வை நசுக்கி விடுவதன் மூலம், ஆதிக்க வர்க்கம் தனது கொள்ளைக்கான பண்பாட்டை அவர்களிடம் திணிக்கிறது. அறத்தின் அடிப்படையிலான வர்க்கப் போராட்டத்தின் பக்கம் அடித்தள மக்கள் திரும்பி விடாமல் திசை திருப்புகிறது.

படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.

நூலை மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்