கோவில் நிலம் சாதி

பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்?

  • நந்தன் வரலாறு
  • இடங்கை வலங்கை மோதல்கள்
  • களப்பிரர்கள் யார்?
  • பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?
  • தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?
  • பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?
  • நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன?

இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது பொ.வேல்சாமி அவர்கள் எழுதி கால்ச்சுவடு வெளியீட்டில் வந்திருக்கும் இந்த நூல். குறிப்பாக சாதியக் கொடுங்கோன்மைகள் குறித்து, சமத்துவ சமூகம் குறித்து சிந்திக்கும் அனைவரும் வாசித்திருக்க வேண்டிய நூல் இது.

முன்னுரையிலிருந்து

கடந்த காலங்களில் பக்தியின் ஊடாக உருவாக்கப்பட்ட கோவில்கள், மனிதர்கள் இடையேயான ஏற்றத்தாழ்வுகளைப் புனிதத்தின் ஊடாக நியாயமாக்கின. .. .. .. பழமையும் புதுமையும் காலத்தால் தூரப்பட்டதாகத் தெரிந்தாலும் நம் சிந்தனையில் அவை அக்கம்பக்கமாகத் தான் உள்ளன. .. .. .. அதிகார வெறியர்களிடமிருந்தும், சாதியையும், மதத்தையும், மொழியையும் பயன்படுத்தி தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் வளர்த்துக் கொள்ளும் பாசிச மனோபாவம் உடையவர்களிடமிருந்தும், பொதுமக்களை விலகி நிற்கச் செய்வதற்கும், ஜனநாயக ரீதியான சிந்தனைகள் வளம் பெற செய்வதற்கும், இத்தகைய கருத்துகளை உடைய கட்டுரைகள் உதவுமென்று நம்புகிறேன்.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

மின்னூலாக (PDF) பதிவிறக்கம் செய்ய

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்