தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?

சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், இவைகளை நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகள் தற்போது புதிய வேகம் பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கொரோனா நெருக்கடி காலத்திலும் இஸ்லாமியர்கள் தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என மக்களிடம் கருத்துவாக்கத்தை ஏற்படுத்த அரசே திட்டமிட்டு செயல்படுவது. கொரோனா இடர்கால உதவி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை மக்களோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்த அரசே களம் அமைத்துக் கொடுப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

இயல்பாகவே, இவைகளுக்கு எதிரான கோபம் சமூக ஊடகங்களில் தெறிக்கிறது என்றாலும், அவை உணர்ச்சிவயப்பட்ட நிலையை கடந்து அறிவுவயப்பட்ட நிலையின் உச்சத்தை அடைய வேண்டும். மீண்டும் சமூக இயக்கமாக, மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அதற்கு இந்த சிறுநூல் ஒரு தொடக்கப் புரிதலை ஏற்படுத்தும் என எண்ணுகிறேன். அந்த விதத்தில் இது முன்னரே வெளிவந்த வெளியீடு என்றாலும், இந்த நேரத்தில் இன்றியமையாத வெளியீடாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் வளர்ந்த விதத்தை விளக்கும் இந்த சிறுநூலை படித்து உள்வாங்கி பரப்புவது இன்றைய சூழலில் காலத் தேவையாக இருக்கிறது.

படியுங்கள், பரப்புங்கள்.

நூலை மின்னூல் கோப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்