புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்கு எதிராக கல்வியை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு, அதன் வரைவை வெளியிட்டபோதே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒரு கொடுந்தொற்று காலத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவை இந்தியா முழுவதிலுமிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்ப்புகள் என எதையும் கணக்கில் கொள்ளாமல் சட்டமாக்கியது. இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் பிணக் குவியல்களுக்கு நடுவே அந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது ஒன்றிய அரசு.
வர்க்கப் பிரிவுகள் பொருளாதார அடிப்படையில் வெகுவாக கூறுபட்டும், அரசியல் அடிப்படையில் பெரிதாக கூறுபடாமல் பொதுவாகவும் இருக்கும், பல்தேசிய நாடான இந்தியாவில் ஒற்றைப் பொதுக்கல்வி என்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை ஏற்கனவே பலரும் விளக்கியுள்ளார்கள்.
இது குறித்து லெனின் என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூல். லெனின் நூல் திரட்டில் பொதுக் கல்வி எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலில், தோழர். கலினின் எழுதிய முன்னுரையிலிருந்து .. .. ..
வர்க்க சமுதாயத்தில் கல்வியிலும் வளர்க்கும் முறையிலும் வர்க்க சாராம்சம் உள்ளது என்பதை மறைக்க செய்யப்படும் முயற்சிகளை அழித்து வீழ்த்தக்க்கூடிய அளவு கடுமையாக லெனின் விமர்சித்தார். செகண்டரிப் பள்ளி சீர்திருத்தத்தை நிறைவேற்றும் திட்டத்தில் உள்ள பிற்போக்குத் தன்மையையும், கற்பனாவாத சாரம்சத்தையும் லெனின் தன்னுடைய Gymanasium farms and corrective gymnasia (1895) என்ற கட்டுரையில் தோலுறித்துக் காட்டினார். இத்திட்டம் ருஷ்யாவிலுள்ள வறுமை மிக்க குடியான மக்களுக்காக பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையிலான பெண்களுக்கும் பையன்களுக்குமான செகண்டரிப் பள்ளிகளை நிறுவவும், அதேநேரத்தில் இப்பள்ளிகள் உற்பத்தி செய்யும் சங்கங்கள் போன்றவைகளாக இருக்கும்படி வகை செய்யவும் உத்தேசித்திருந்தது. .. .. ..
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.