லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன்.

சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது அருகில் எப்போதும் வைத்திருப்பேன். படித்துக் கொண்டே இருப்பேன். இந்த நூலைப் பற்றி ஏற்கெனவே வகுப்பெடுத்துள்ளேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிப்பது எனது வழக்கம்.

“டூரிங்குக்கு மறுப்பு” நூலுக்கு அடுத்தப்படியாக மார்க்சிய தத்துவத்தை “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற இந்த நூல் சிறப்பாக விளக்குகிறது..

இன்று மார்க்சின் “ஃபாயர்பாக் ஆய்வுரைகளை” வைத்து குழப்ப முனையும் பலரை அம்பலப்படுத்தும் நூலாக இது இருக்கிறது. மார்க்சின் இந்த ஆய்வுரைகளை இந்த நூலின் பிற்சேர்க்கையாக முதலில் வெளியானது. எங்கெல்ஸ் தான் இந்த ஆய்வுரைகளை முதன்முறையாக வெளியிட்டார். அதனால் இந்த நூலில் அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நூல் மார்க்சிய தத்துவத்தை மட்டும் பேசும் தனித்த நூலாகும். “மூலதனம்” நூலின் மூலம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதைப் போல மார்க்சிய தத்துவத்தை இந்த நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த நூலை தோழர் மு.சிவலிங்கம் அவர்கள் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

ஈஸ்வரன் அ.கா – முகநூலில்

பின்குறிப்பு: இந்த மொழியாக்கத்தில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து அறிய விரும்புவோர் இங்கு அதை படித்துக் கொள்ளலாம்.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்