இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம்.

அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள முடியுமா? என்று சுதி மாறுவார்கள். தமிழ் நாட்டு வரலாற்றில் பக்தி இயக்கத்தின் இடம் எது என்று கேட்டால், இவ்வளவு நாத்திக பிரச்சாரத்துக்கு மத்தியிலும் கடவுள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது என்று வேறு இடத்துக்கு தாவுவார்கள்.

மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதனாலேயே தமிழ்நாட்டு வரலாறு ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டது என்று கூறி விட முடியுமா? ஆன்மீகம் என்பது நிறுவனமயமாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை. ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்காக இரண்டையும் ஒன்றாக இணைக்க கடும் முயற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு வடிவம் தான் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூச்சமே இல்லாமல் பொய்களை கட்டவிழித்து விடுவது.

இந்து என்று சொல்லப்படும் மதம் வேறு ஆர்.எஸ்.எஸ் வேறு. இந்து வேறு இந்துத்துவா வேறு. இதை குழப்பமற புரிந்து கொள்வதற்கு இந்திய நாத்திக வரலாற்றைப் படிக்க வேண்டும். நத்திக வரலாற்றை படிக்கத் தூண்டும் முன்னுரையாக, தோழர். நா.வனமாமலை எழுதிய இந்தக் குறுநூல் பயன்படும்.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்