நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்

இன்றைய போதில் கொரோனா அச்சம் மக்களிடம் பரப்பப்பட்டு, அதன் உச்சத்தை எட்டி நிற்கிறது. எவ்வாறெனில், உலக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்பட்டு மாதக்கணக்கில் தங்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துக் கொள்ள எண்ணும் அளவை எட்டியிருக்கிறது. இந்த பயம் தேவையா? தேவயில்லையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் மக்கள் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அதற்கு எதிராக பேசுவது, அதற்கான உண்மையை உணர்வதிலிருந்து விலகும் இடத்துக்கு மக்களை கொண்டு சென்று விடக் கூடாது.

இன்றைய நுகர்வு உலகில் நுண்ணுயிரி அல்லது கிருமி – இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் நோயைப் பரப்பும் நுண்ணுயிரி – என்பது மிக மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. விற்பனை செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் பின்னிலும் நோய்த் தொற்றின் பயம் பின்னப்பட்டிருக்கிறது. இந்த பயம் இல்லையென்றால் நுகர்வின் பெரும்பகுதி சரிந்திருக்குமா? என்பது பொருள் மிக்க கேள்வி. இந்தக் கேள்வியின் மறுபக்கத்தை பார்த்தால், மக்களை பெரு நுகர்வுக்குள் தள்ள இந்த கிருமி பயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

நுண்ணியிர் தேற்றம் (Germ Theory) லூயி பாஸ்ர் (Louis Pasteur 1822-1895) எனும் அறிவியலாளரிடமிருந்து தொடங்குகிறது. வெளியிலிருக்கும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரி மனித உடலுக்குள் நுழைவதாலேயே நோய் ஏற்படுகிறது எனும் அந்த தேற்றம் பெரும் வளர்ச்சி கண்டு இன்று வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என்றும் அவைகளுக்குள்ளும் குடும்பம் வகை மாதிரிகள் பிரிக்கப்பட்டு பலவகை நுண்ணுயிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கேவிட்19 காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கூட கொரோனா குடும்பத்தின் ஏழாவது வகை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வைரஸ்கள் பரிணாமம் அடையும் வேகத்தில் புதுப்புது வடிவத்தில், வேறுவேறு தன்மைகளில் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருக்கும். அவைகளுக்கான மருந்துகளும், தடுப்பூசிகளும் பெருகிக் கொண்டே இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவருக்கு ஏற்படும் சளியில், காய்ச்சலில் புதிதாக ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்படலாம். அது வேகமாக பரவும் நிலையில் இருந்தால், அதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படும் வரையில் உலகம் பீதியை அள்ளி அணிந்து கொண்டிருக்கும். பின் வேறு ஏதோ ஒரு வைரஸ், வேறு ஏதோ ஒரு வகையில் பீதி, வேறு ஏதோ ஒரு மருந்து .. .. .. காலரா, மலேரியா, நிமோனியா, சார்ஸ், மேர்ஸ், எய்ட்ஸ், நிபா, கொரோனா என்று வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா? அறிவியல் உலகம் இதற்கு மாற்றை சிந்திக்காதா? அல்லது சிந்திக்கவே இல்லையா? சிந்திக்கவே இல்லை என்றால் ஏன் சிந்திக்கவே இல்லை?

இந்த இடத்தில் நாம் ஆந்தொய்னே பீச்சாம்ப் (Antoine Bechamp 1816-1908) எனும் அறிவியலாளரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவரும் லூயி பாஸ்டர் வாழ்ந்தே அதே காலகட்டத்தில் வாழ்ந்தவர். அதே நுண்ணியிரிகள் துறையில் லூயி பாஸ்டருக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்தவர். அறிவியல் கழகத்தில் அளிக்கப்பட்ட உரைகளிலும், அதற்கு சான்றாக அளிக்கப்பட்ட ஆவணங்களிலும் இருவருக்குமிடையே போட்டி நிலவியது. தன்னுடைய ஆய்வுகளிலிருந்து திருடப்பட்டு, திரிக்கப்பட்டவை தான் லூயி பாஸ்டரின் ஆய்வுகள் என்று பீச்சாம்ப் நிரூபித்துக் கொண்டே இருந்தார். பீச்சாம்பும் மற்றவர்களும் அந்த திருட்டுத்தனத்தை எதிர்த்தபோது, பாஸ்டர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பீச்சாம்பின் தொழில் மற்றும் நற்பெயரை அழிக்கத் தொடங்கினார். கெடுவாய்ப்பாக, பாஸ்டர் பெரும் வெற்றி பெற்றார். எவ்வாறென்றால், அவர் அரசியல் விளையாடுவதில் திறமையானவராகவும், அரசின் உயர் வட்டங்களில் நண்பர்களை கொண்டவராகவும் இருந்தார். என்றாலும் லூயி பாஸ்டர் இறுதியில் தன்னுடைய கோட்பாடு தவறானது என ஒப்புக் கொண்டார்.

பீச்சாம்ப் தனது கண்டுபிடிப்பு கடவுளைப் போன்றது என்றார். அதாவது, கடவுள் இந்த உலகத்தை எவ்வாறு காக்கிறார் என்று நம்பப்படுகிறதோ அதே போன்று நுண்ணியிர்கள் உயிர்களைக் காக்கின்றன என்றார். அந்த வகையில் இது அறிவியலுக்கும் மதத்துக்குமான தொடர்பு என்றார். மைக்ரோசைமாஸ் எனும் செல்லின் நுண்துகள் உயிர்களின் உடல்களுக்கு தேவைப்படும் போது நுண்ணுயிர்களைப் படைக்கின்றன அல்லது நுண்ணியிர்களாக மாற்றமடைகின்றன என்கிறார் பீச்சாம்ப். அதாவது, நுண்ணியிரிகள் வெளியில் இருந்து உடலுக்குள் வருவதில்லை, உள்ளுக்குள்ளே இருக்கின்றன என்கிறார்.

இந்த கண்டுபிடிப்பு அன்றைய மருத்துவக் கொள்ளைக்கு ஆதரவாக இல்லை என்பதோடு மட்டுமன்றி எதிராகவும் இருக்கிறது. இது தான் பீச்சாம்பை விடுத்து லூயி பாஸ்டரை முன்னணிக்கு கொண்டு வருகிறது. அது மட்டுமா? மைக்ரோசைமாஸ் நுண்ணுயிர்களை படைக்கிறது அல்லது நுண்ணுயிராக மாறுகிறது என்பது இயங்கியல் பொருள்முதல் வாதத்துக்கு எதிராகவும் இருக்கிறது என கருதப்படுகிறது. ஆனால் யதார்த்தம் என்ன என்பது அறிவியல் மேடைகளில் மெய்ப்பிக்கப்படுவதில் இருக்கிறது.

ராயல் ரீஃப் (Royal Raymond Rife 1888-1971) தனது நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மைக்ரோசைமோஸ் நான்கு வெவ்வேறு வகைகளாக மாறுவதை கண்டுபிடித்துள்ளார்.

பிரெஞ்சு விஞ்ஞானி கேஸ்டன் நீசென்ஸ் இதற்கென கண்டுபிடித்த சொமோட்டோஸ்கோப் என்ற தனது சொந்த நுண்ணோக்கியின் உதவியுடன் இந்த துகள்கள் பதினாறு வெவ்வேறு வடிவங்களில் – பாக்டீரியா மற்றும் பூஞ்சை உட்பட – வடிவமைக்கப்படுவதைக் கவனித்தார் – அதை அவர் ‘சோமாடிட்ஸ்’ என்று அழைத்தார்.

ஜெர்மன் விஞ்ஞானி குந்தர் எண்டர்லின் (Gunther Enderlein 1872-1968) அதே துகளை அடையாளம் கண்டு அவற்றை ‘புரோட்டிட்ஸ்’ என்று அழைத்தார்.

1990 களில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பிலிப்பா யுவின்ஸ் மணற்கல் பாறை துகள் மாதிரிகளில் அந்த துகளை கண்டுபிடித்து, அதை நானோப்கள் என்று அழைத்தார்.

பீச்சாம்ப் தனது நுண்ணிய துகள்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை இயற்கையில் எல்லா இடங்களிலும் கண்டறிந்தார். அவை சுண்ணாம்புக் கல்லிலும் இருந்தன, வெளிப்படையாக இது புராதன கால ஓடுடைய உயிரினங்களின் உடல்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கலாம். சுண்ணாம்புக் கல்லிலிருந்து வரும் இந்த துகள்கள் அவற்றின் செயல்பாட்டை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளன; அவற்றை நிறுத்திய ஒரே காரணி வெப்பம். ‘நொதித்தல்’ அல்லது அதுபோன்ற செயல்பாட்டைக் குறிப்பதற்கு பயன்படும் ‘சைம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, அச்சிறிய துகள்களுக்கு ‘மைக்ரோசைமாக்கள்’ என்று பெயரிட்டார். பீச்சாம்ப் பேசுவது ஒரு அடித்தளக் கருத்து. இது உயிரியல் மற்றும் உயிரணு செயல்பாட்டை பெரும்பாலான நவீன அறிவியல் கருத்துகளூக்கு மாற்றாக விவரிக்கிறது. அவரது சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின்படி, எல்லா உயிர்களையும் நிலைநிறுத்துவதிலும், சிதைப்பதிலும் மைக்ரோசைமாக்கள் முதன்மைப் பங்கை ஆற்றுகின்றன

பீச்சாம்ப் கூறியது போல், “வாழ்க்கை என்பது மற்றொரு வாழ்க்கையின் இரையாகும்.” ஒரு உயிரினம் இறக்கும் போது, மைக்ரோசைமாக்கள் அதை உடைத்து அதன் கூறுகளை சிதைத்து இயற்கைக்குத் திருப்பித் தரும் பாத்திரத்தை எடுத்துக் கொள்கின்றன, அங்கு அவை மீண்டும் பயன்படுத்த மற்ற வாழ்க்கை வடிவங்களால் உள்ளீடுகளாக கொள்ளப்படுகின்றன. இந்த சுழற்சி யதார்த்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது.

பீச்சாம்பின் இந்தக் கோட்பாடு ப்லியோமார்பிசம் (Pleomarphism) எனப்படுகிறது. இது இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அவசரத் தேவையைக் கொண்டிருக்கிறது. லூயி பாஸ்டர் கண்டுபிடிப்புகளை அது ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பயன்படும் என்பதால் மென்மேலும் வளர்த்தெடுத்து, அதையே அறிவியல் என்றும், அதைத் தவிர ஏனையை எல்லாமும் அறிவியலுக்கு வெளியே இருப்பவை என்றும் ஒரு பிம்பம் கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. இன்று உலக மக்கள் தங்களை வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதற்கான காரணம் இதில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஓர் ஆய்வு என்ற அளவிலேனும் இல்லாமல் பீச்சாம்பின் ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் எந்த பதிப்பிலும் பீச்சாம்ப் இல்லை. அவரது பெயர் அல்லது அவரது படைப்புகளைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் பெரும்பாலான பாடப்புத்தகங்களில் இல்லை. வரலாற்றிலிருந்து அவர் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார். நாளை, பீச்சாம்ப் அவருக்குரிய தகுதியான ஒரு நிலைக்கு மீட்டெடுக்கப்படுவாராயின் அது வரலாற்றில் மக்களுக்கான நாளாக இருக்கும்.

பின்குறிப்பு: இந்த கட்டுரைக்கான உந்துதலையும், உள்ளீட்டையும் தந்தது, பீச்சாம்ப் குறித்த Antoine Bechamp – A Summary எனும் கட்டுரை தான்.

தொடர்புடைய பதிவுகள்

கிருமிகள் உலகில் மனிதர்கள்

வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்

கரோனா வைரஸ்: சில கேள்விகள்

தடுப்பு ஊசி: எது வதந்தி?

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்