தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிகாரத்தில் ஒன்றியம் பராரியாய் மாநிலங்கள்

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் சென்னையில் கடும் மழை கொட்டியது. குடியிருப்புகளில் பல நாட்களுக்கு மழைநீர் தேங்கி நின்று மக்களை முடக்கியது. சாலைகள் நாசமாகியது தொடங்கி, நீர்வழிப் பாதைகள், வடிகால் பாதைகள் முறையாக செப்பனிடப்படாதது வரை சென்னை தத்தளித்தது. தொடர்ச்சியாக இருந்த அரசுகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுடன் உட்கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் நடந்த ஊழலும் வெளிச்சத்துக்கு வந்தது. இருந்த போதிலும் தற்போது இருக்கும் திமுக அரசு இந்தப் பேரிடரின் போது எவ்வாறு செயல்பட்டது … அதிகாரத்தில் ஒன்றியம் பராரியாய் மாநிலங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக

பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு

நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் பாஜக எனும் விலங்கு தற்போது லட்சத் தீவை நோக்கி தன் பார்வையைத் திருப்பி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. கேரள நடிகர்கள் தொடங்கி, சற்றேறக் குறைய பாஜக மற்றும் அதனைச் சார்ந்த கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின, வெளிப்படுத்தி வருகின்றன. அந்த விலங்கு தொடர்ந்து இப்படி வேட்டையாடிக் கொண்டிருப்பதை எப்படி … லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த … மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைஞர் கடந்த தடங்கள்

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர், நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால், அது ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். காற்று, தண்ணீர், உணவு, உடை, உறைவிடம், மொழி, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, சாலைவசதி, மின்சாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழிற்சாலை, தொலைத் தொடர்பு. தண்ணீர் / Water 1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது … கலைஞர் கடந்த தடங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை

தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.

“இந்தி”யா .. .. ..?

கொடி தலைகீழா இருக்குதுன்னு யாரும் கூவாதிங்கப்பா செய்தி: சென்னை விமான நிலையத்தில் நேற்று மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் … “இந்தி”யா .. .. ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து என்பது யார்?

கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை? இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா? இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை? புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன. எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு. … இந்து என்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.