அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

  அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் … அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…

நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள். லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் … புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…-ஐ படிப்பதைத் தொடரவும்.