இலங்கையும் அதன் பொருளாதாரமும்

கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால … இலங்கையும் அதன் பொருளாதாரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார். இராஜபக்சேவுக்கு எதிரா … ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம்

இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரில் ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் ராணுவக்காவலுக்குள் விடப்பட்டுத்தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் கண்ணீரை துடைத்துவரும்(!) திட்டத்துடன் அனுப்பபட்ட நாடாளுமன்ற பத்துப்பேர் குழு திரும்பிவந்திருக்கிறது. இந்த ஐந்து நாள் பயணத்தில் ஐந்து மணிநேரம் மட்டும் தமிழர்களை பார்வையிட்டுவிட்டு மீதி நேரங்களில் ராஜபக்சேவுடனும், அரசின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பதிலுமே செலவிட்டுள்ளது. பின்னர் சென்னையில் முதல்வரை சந்தித்தனர், முதல்வரும் இன்னும் பதினைந்து நாட்களில் 58 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்தார் அத்துடன் எல்லாம் முடிந்தது. … சிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய … ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

            கடந்த சில நாட்களாகவே தமிழர்களிடம் சிக்கலும் சிரமமுமாய் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது.மெய்யா? பொய்யா? கொல்லப்பட்டது பொய்யாயிருக்கவேண்டும், தப்பியது மெய்யாயிருக்கவேண்டும் எதிர்பார்ப்பின் எல்லைகள் நீள்கின்றன. சிங்கள அரசு வெளியிட்ட அசைபடத்தை கண்டவர்களுக்கு ஐயம் எழ வாய்ப்பே இல்லை, அது பிரபாகரன் இல்லை என்பதில். மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்திவிட்டோம் என்று சிலமணி நேரங்களிலேயே தொடர்ந்து வந்த சிங்கள அரசின் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு புரியும். இறந்த … ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை … பிரணாப் இலங்கை சென்றது எதற்கு? பிணங்களை எண்ணிப்பார்க்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.