ஹிஜாபும் பூனூலும்

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கல்லூரிகளை மையமாகக் கொண்டு ஒரு சிக்கல், மத மோதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனும் உத்தரவு போட்ப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் படிக்கட்டுகளிலும் வெளியிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தின. ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி ஊடாக காஷ்மீரின் மஹ்மூதா முப்தி … ஹிஜாபும் பூனூலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே!   கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் … மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்! கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!! அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு 23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் … பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !-ஐ படிப்பதைத் தொடரவும்.

செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்

எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு … செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.