இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்

  சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

அன்பார்ந்த பொது மக்களே, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு … பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?

கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது.  அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌

  கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் … ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது

கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ள‌து. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!)  நடைபெற்றது. இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான். இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு … அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது-ஐ படிப்பதைத் தொடரவும்.