பார்ப்பன அரசு

அதிகார மய்யங்களைச் சமரசமின்றி எதிர்த்து துணிவுடன் குரல் கொடுத்து வருகிறார் அருந்ததிராய். அவரது வலிமையான எழுத்துகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையே எதிரொலிக்கின்றன. பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்களின் வலைக்குள் சிக்கி விடாது, காஷ்மீர் பிரச்சனையிலிருந்து பழங்குடி மக்கள் வரை பாதிக்கப்பட்டோர் பக்கமே நிற்கும் அருந்ததிராயின் உரையே இந்த வெளியீடு.

தண்டகரண்யப் பகுதிக்கே துணிவுடன் பயணம் மேற்கொண்டு பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் இராணுவ ஒடுக்குமுறைகளை வெளிச்சப்படுத்தும் அவர் உரையில்,

“இலங்கை அரசு செய்தது போல் இந்திய அரசு வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும் சுட்டுத் தள்ளவும் கூட்டம் கூட்டமாக மக்களை அழிக்கவும் முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் பார்ப்பனிய குணம் படைத்த சூழ்ச்சிக் காரர்கள். பையப் பைய இனப்படுகொலை செய்வது தான் நமத் அரசின் திட்டம்” என்று இந்திய அரசின் பார்ப்பனியத்தை துணிச்சலுடன் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

உலகமயமாக்கலை தன்வயமாக்கிக் கொண்டு பனியா-பன்னாட்டு நிறுவனங்களின் வழியாகமக்களை சூரையாட பார்ப்பனியமும் முதலாளித்துவமும் கை கோர்த்துக் கொண்டு வருகின்றனர். இவர்களைப் பாதுகாக்க இந்தியப் பார்ப்பன ஆட்சி சட்டங்களைப் போடுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிறபடுத்தப்பட்டோர் ஆகியோர்களது வாழ்வுரிமைகளும் சமூக உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

பார்ப்பனிய முதலாளித்துவத்தின் இந்த கோர முகத்தை அடையாளம் காட்டி அடக்குமுறைக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். அந்த நோக்கத்தோடு சர்வதேச புக்கர் விருது பெற்ற அருந்ததிராயின் இந்த உரையை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

மின்னூலாக பிடிஎஃப் பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்