மீண்டும் மீண்டும் ஆபத்து

காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் செய்தது இந்த உலகை ஆளும் ஏகாதிபத்தியம் எனும் புரிதலுக்கு – மிக மெதுவாக என்றாலும் – மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

உயிர்க்கொல்லி நோய்கள் மீண்டும் வருகிறதா ஆபத்து?  என்ற தலைப்பில் அக்கு ஹீலர் உமர் ஃபாருக் எழுதிய இந்த நூலை எந்தவித காய்தலும் உவத்தலும் இன்றி படித்துப் பாருங்கள். இதிலுள்ள விவரங்கள், தரவுகளை ஆய்வு செய்யுங்கள். சரி என நீங்கள் கொண்டால், அந்த புரிதலுக்குள் நீங்களும் வாருங்கள்.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்