ராம நவமி: எங்கு திட்டமிடப்பட்டது?

ராம நவமி வன்முறை குறித்து பொதுவான கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்றால், 1. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத திட்டத்தின் படி இஸ்லாமியர்கலை இரண்டாம் தர குடி மக்களாக ஆக்க, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய திட்டமிடுகிறார்கள். 2. நிர்வாகத் தோல்வி, விவசாயத்துக்கு எதிரான, தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான திட்டங்களால் வாழ்வாதாரம் இழக்கும் மக்களை திசை திருப்புவதற்காக மதவெறியை தூண்டுகிறார்கள். ஆனால் இவைகளை விட முதன்மையான செய்தி என்னவென்றால், இஸ்லாமிய வெறுப்பை இன்னும் குறிப்பாகச் சொன்னால் சாதியப் படிநிலையின் படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது சரிதான் எனும் கருத்தோட்டத்தை மக்களின் இயல்பாக ஆகும் படி துல்லியமாக விதைக்கிறார்கள்.

பார்ப்பனியம் பல திட்டமிடல்களைச் செய்கிறது. ஒட்டுமொத்த இந்திய அரசு உறுப்புகள் அனைத்தும் துணையாக இருப்பதால் பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்கிறது. வெகு சில திட்டங்கள் தோல்வியடைகின்றன. வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அவர்களின் இலக்கு நிறைவேறுகிறது. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதும், மாற்றுக் கருத்து இருந்தாலும் அமைதியாக இருப்பது தான் பாதுகாப்பு எனும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதும் ஆன அவர்களின் இலக்கு நிறைவேறுகிறது.

இதற்கு எதிராக என்ன செய்வது? என்ன செய்வதாக இருந்தாலும் அதன் முதற் கட்டமாக நடக்கும் நிகழ்வுகளை எப்படி பார்க்க வேண்டும் என்று அறிந்து கொள்வது தான். அதை இந்த காணொளி உங்களுக்கு வழங்கும் எனக் கருதுகிறேன். மெட்ராஸ் ரிவியூ வழங்கும் இந்தக் காணொளியை

பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்