மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே  பகுதி 4

டாப்கபி அருங்காட்சியகத்தில் உள்ள குரான்

இதில் முரண்பாட்டை காணமுடியுமா? இதைப்போல் ஒன்றை உருவாக்கிக்காட்டமுடியுமா? எனும் இரண்டு கேள்விகளை அடுத்து, குரான் இறைவனால் இறக்கப்பட்டதுதான் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் இன்றியமையாத இன்னொன்று அன்றிலிருந்து இன்றுவரை அதாவது ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாத ஒரே வேதம் இது தான் என்பது. அதற்கு சான்றாக இரண்டு குரான் படிகள் இன்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரின் அருங்காட்சியகத்தில் ஒரு படியும், துருக்கியின் இஸ்தான்புல் நகரின் டாப்கபி அருங்காட்சியகத்தில் ஒருபடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ள குரான் எப்படி தொகுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்வது தேவையானதாகும்.

சற்றேறக்குறைய கிபி 610 ல் முகம்மதுவின் 40ஆவது வயதில் தொடங்கி 633ல் அவர் இறக்கும் வரை 23 ஆண்டுகளில் ‘வஹி’யாக வெளிப்பட்டதுதான் குரான். ஆண்டவனின் சிறப்பு பணியாளரான ஜிப்ரீல் என்பவர் முகம்மதுவுக்கு கற்றுக்கொடுக்கொடுக்கும் நிகழ்வு தான் ‘வஹி’ என்பது. அந்தந்த காலகட்ட பிரச்சனைகள் தேவைகளுக்கு ஏற்ப சிலச்சில வசனங்களாக அவ்வப்போது இறங்கியது(!) முகம்மது தனித்திருக்கும்போதும், மக்களுடனிருக்கும் போதும் வசனங்கள் இறங்கியிருக்கின்றன. ஆனால் ‘வானவரை’ பார்த்தவர்களோ அல்லது அவர் வந்து சென்றதுக்கான தடையமோ கிடையாது. இதன் காரணமாக ஆண்டவனே நேரடியாக முகம்மதின் மனதில் சில வசனங்களை போட்டதாகவும் கூறுவர். இப்படி முகம்மதுவுக்கு வெளிப்படும் குரான் வசனங்களை மனனம் செய்து தன் தோழர்களிடம் கூறுவார், அவர்கள் அதை தோல்களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைத்துக்கொள்வர். குரானை எழுதிவைத்துக்கொள்வதற்காக ஒரு குழுவையும் முகம்மது நியமித்திருந்தார். அவர்களில் முகம்மதுவுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, முஆவியா ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். இப்படி தொகுக்கப்பட்ட குரான் இன்றைய குரானிலிருந்து வேறுபட்டது, இன்றுள்ளதைப்போல் வரிசைப்படுத்தப்படாமல் வசனங்களின் மொத்தமான தொகுப்பாக இருந்தது. யாருக்கு எந்தப்பகுதி வேண்டுமோ அதை எடுத்து படித்துக்கொள்ளலாம். முஸ்லீம்களின் வணக்கமுறையான ஐவேளை தொழுகையின் போதும் குரானின் பகுதிகள் ஓதப்படும் இது முஸ்லீம்கள் குரானை மறந்துவிடாமலிருக்க முகம்மது செய்த ஏற்பாடு.

முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது தொகுத்திருந்த குரான் , மனப்பாடாம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் ஒரு குரான் தயாரிக்கப்பட்டு அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குரானின் அடிப்படையிலேயே தீர்வுகள் பெறப்பட்டன. இந்த குரான் அபூபக்கருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது. உமருக்குப்பின் அவரின் மகளும் முகம்மதின் மனைவியுமான ஹப்ஸா என்பவரிடத்திலும் இருந்தது. உமருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் மீண்டும் ஒரு குரானை தொகுக்க முற்படுகிறார். உஸ்மான் தானே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குரான் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குரான் படிகளில் இரண்டு தான் ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது, அதாவது முகம்மதின் மரணத்திற்குப்பின் கால் நூற்றண்டு கழிந்து. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் உஸ்மான் தனது ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குரானைத்தவிர ஏனைய அனைத்து குரானையும் எரித்துவிடுமாறு உத்தரவிடுகிறார். அதன் படி அனைத்தும் எரிக்கப்படுகின்றன, முகம்மது தயாரித்திருந்தது, அபூபக்கர் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஹப்ஸாவிடம் இருந்தது என அனைத்தும் எரிக்கப்படுகின்றன. ஏனைய குரான்களை அழிப்பதற்கு உடன்பட மறுத்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களும் வற்புறுத்தப்பட்டு அனைத்தும் அழிக்கப்படுகிறது. இன்று நடைமுறையில் இருக்கும் அனைத்து குரானும் உஸ்மான் காலத்தில் தயாரிக்கப்பட்டதின் அடிப்படையிலேயே அச்சிடப்படுகின்றன.

இந்த இடத்தில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி, உலகம் உள்ளவரை தோன்றும் அனைத்து மனிதர்களுக்கும் அழகிய முன்மாதிரி முகம்மது தான் என்பதில் எந்த முஸ்லீமுக்கும் ஐயம் எழும் வாய்ப்பே இல்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் செருப்பு, வாள் வைத்திருந்த தோலுறை கூட பத்திரப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முகம்மது எதன் அடிப்படையில் சமூகத்தை திரட்டினாரோ, உலகம் உள்ளவரை எந்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறினாரோ அந்த இறைவனால் முகம்மதுவுக்கு வழங்கப்பட்டு அவரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்ட குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது. இது ஏன்?

இதற்கு பதில் கூறுமுகமாக, முகம்மது தொகுத்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது முறையாக தொகுக்கப்படாமல் தனித்தனி வசனத்தொகுதிகளாக இருந்தது. அதன் அடைப்படையில்தான் இது தொகுக்கப்பட்டிருக்கிறது எனவே வித்தியாசமில்லை, முகம்மது இருக்கும் போது மனனம் செய்திருந்தவர்கள் தான் தொகுத்தார்கள், எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றெல்லாம் காரணங்களாக அடுக்குகிறார்கள். ஆனால் முக்கியமான விசயம் என்னவென்றால் ஐயம் என்று வந்துவிட்டால் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முகம்மது தொகுத்த குரான் இன்று இல்லை, உஸ்மான் காலத்தில் தொகுத்தது தான் இருக்கிறது. வரிசை மாறியிருக்கும் என்பது தானே அதை அழித்ததற்கு கூறும் காரணம், வரிசை மாறினால் என்ன வசனம் அதே வசனம் தானே அழிக்கும் தேவை ஏன் எழுந்தது? வரிசையை வசன எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை எப்படியும் இருக்கலாம். இன்று இருக்கும் குரான்களில் கூட வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் வசனத்தை ஒப்பிடுவதற்கு திடனான ஆதாரம் ஒன்றுமில்லை. உஸ்மானுக்கு பிறகு குரானில் மாற்றமில்லை என்றால் அதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா? முஸ்லீம்கள் நேர்மையாக சிந்தித்துப்பார்க்கும் நேரமிது.

முதன் முதலில் முகம்மதுவுக்கு வஹீ வந்த ஹீரா குகை

இரண்டாவது கேள்வி, அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் அவரின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு உமரிடம் வருகிறது. உமரின் ஆட்சிக்காலத்திற்குப்பின் அது உஸ்மானின் பொறுப்பில் வந்திருக்கவேண்டும். ஏனென்றால் அது வெறும் நூலல்ல, வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஆவணம். உமருக்குப்பின் அந்த ஆவணம் உஸ்மானின் பொறுப்பில் வராமல் உமரின் மகளான ஹப்ஸாவின் பொறுப்பில் போகிறது. இது ஏன்? இதனால் தான் உஸ்மானால் குரான் மீண்டும் தொகுக்கப்பட்டதா? இதன் காரணமாகத்தான் உஸ்மான் தான் தொகுத்ததை தவிர மற்றவற்றை எரித்து விட உத்தரவிட்டாரா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் நேர்மையான பதில் கிடைக்காதவரை குரான் பாதுகாக்கப்பட்டது என்பது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும்.

39 thoughts on “மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

  1. அன்புள்ள செங்கொடித்தமிழன் அவர்களுக்கு
    உன்னதம் இதழாசிரியர் கௌதம சித்தார்த்தன் வணக்கம். உங்களுடன் தொடர்பு கொள்ள பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் போகாமல் திரும்பி வந்துவிடுகிறது. ஆகவே என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
    நான் தொடர்ந்து செங்கொடியின் சிறகுகள் படித்துக் கொண்டிருக்கின்றேன். மிகவும் ஆழமான படைப்புகளை உள்ளடக்கிய அற்புதமான வலைத்தளம். உங்களது பணி மிகவும் முக்கியமானது. மேலும், உங்களது முக்கியமான கட்டுரை ‘இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே’ என் மனமார்ந்த பாராட்டுதல்கள்.
    தமிழ்நாட்டிலிருந்து உன்னதம் என்கிற பெயரில் சர்வதேச அரசியல் மாத இதழாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வெளிவருகிறது.

    உங்கள் பதில் கடிதம் எதிர்பார்த்து…

    அன்புடன்
    கௌதம்

  2. தோ வந்துட்டாங்கப்பா சிவப்பு கொடிய தூக்கிக்கிட்டு.
    மொதல்ல கால் மாக்ஸ் தாடிக்கு பேன் பாருங்க. அப்புறமா மத்தவங்க குடுமிய பத்தி பேசலாம்.
    போங்கடா போக்கில்லா பயலுகளா

  3. உண்மை வரலாற்றை எப்படியெல்லாம் மாற்ற வேண்டுமோ, அப்படியெல்லாம் மாற்றி எழுதியிருக்கின்றார். இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில ஊடகங்களில் முன்னர் உலாவி வந்த உண்மைக்குப் புறம்பானவைகளில் சிலதை எழுதியிருக்கின்றார்.

    சாதாரணமாக இஸ்லாத்தை விளங்கிய ஒருவர் இதை வாசிக்கும்போதே, இதன் கோணல் விளங்கிவிடும்.

    தொடரட்டும் இவரின் பொய்மை முடிச்சுக்கள்.

  4. நண்பர் கொரகா,

    நான் எழுதியிருக்கும் வரலாற்றுச்செய்திகளில் எது பிழையானது அல்லது தவறானது எனக்குறிப்பிடமுடியுமா? சரியான தக‌வலை நீங்கள் தந்துதவலாமே. தவறு என நீங்கள் நினைத்தால் அதைக்குறிப்பிடுங்கள். கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதில்கூற முற்படுங்கள். அதை விடுத்து ஏதோ நான் தவறாக எழுதியிருப்பதைப்போல் பிம்பம் உருவாக்க முனையவேண்டாம்.

    தோழமையுடன்
    செங்கொடி

  5. You know everything Mr.Redflag, but, acting like an innocent. Don’t you know: Allah says, quran is being protected in the mind of moomins? This protection is primary. That time may be 1000 odd people. But, now it may be in few crores. This protection is primary. Written qurans are secondary protection – man made protection. Whatever written in the lifetime of prophet (sal) were being protected by many people as 114 sooraas. Many sahaabis had written immediately after wahi. So, as for as protection is concerned primary is by heart protection. Secondary is letters – also protected perfectly. You have the answer in quran tharjuma introduction by moulvi pj as ‘quran pathukaakkappatta varalaaru’ in http://www.online pj.com in quiet elaborately.

    Your second question is really showing your venom in your mind. Don’t you know at the time of Abubakkar(ral) death he himself selected a khalifa in Umar(ral)? Then he handed over it. But, at the time of Umar(ral) death, he only selected a group of 8 sahaabis (who were promised for heaven) to elect a khalifa among them. When they elected Uthuman(ral), he was no more. So, how could have he handed over it to new khalifa? Moreover, hafsa(ral) is not only the daughter but wife of prophet(sal). This quran with all other quran had gone to kalipha Uthuman(ral)’s 11 member committee for proof reference and binding and printing. You can also get detail here: http://alrisala.org/Articles/quranworld/preservation_of_quran.htm

  6. கல்லாலடித்து கொல்வதற்கான குரான் வசனங்கள் குரானில் இருந்தன. பிறகு அவை நீக்கப்பட்டன.

    இவை பல ஹதீஸ்களிலேயே ஆவணமாக கிடக்கின்றன.

    இவர்கள் குரான் மாற்றப்படவே இல்லை என்று சொல்கிறார்கள்.

    (1) Abu ‘Ubaid quotes a tradition coming down from ibn Jaish, saying: ‘Ubai said, “How many verses is the Suratu-‘l-Ahzab (xxxiii)? ” I said, “Seventy-two or seventy-three.” He said, “It was as long as the Stiratu’l-Baqara (ii) and we used to read in it the Verse of Stoning.” I said, “And what was the Verse of Stoning?” He said, “The married man and the married woman when they commit adultery, they stone without doubt[3] as a punishment from God.”‘

    (2) We read in the ‘Kitabu’l-Burhan’ that ‘Umar said, ‘Were I not afraid lest people should say that I have added to the Qur’an I would have recorded it (i.e. the Verse of Stoning).'[4]

    (3) Another tradition is traced back to Abu Imama ibn Sahal to the effect that his aunt said: ‘The Prophet . . . read to us the Verse of Stoning, saying, “If an old man and an old woman commit adultery stone them both for the pleasure they have sought.”‘

    (4) Al-Hakim quotes another tradition from ibn Sait saying: ‘When Zaid ibn Thabit and Sa’id ibn al-‘As were writing out the Qur’an, they came to this verse (i.e. Verse of Stoning), Zaid said, “I have heard the Prophet say, if an old man and old woman commit adultery stone them both.”‘

    (5) According to the same tradition, ‘Umar said: ‘When this verse came down I went to the Prophet and said, “May I record this verse? ” But it seems he disliked it . . . ‘

    (G) An-Nisa’i quotes a tradition similar to the previous one about ‘Umar.

    (7) In the ‘Itqan’ (on Fada’ilu’l-Qur’an) ibn Durais cites a tradition ascribed to ibn Aslam to the effect that ‘Umar once addressed a large audience and said: ‘Doubt not concerning stoning, for it is lawful. I would have written the Verse of Stoning in the Qur’an, but Ubai ibn Ka’b said to me, “Dost thou not remember when thou once camest unto me while I was asking the Prophet to recite the verse to me, and he pushed me in my chest? And thou saidst unto me, ‘Dost thou ask the Prophet to recite the verse to you when people are committing adultery like beasts?”‘ 1

  7. வரலாற்றை உண்மையாகத் தெரிந்தவருக்கு, செங்கொடியாரின் உண்மைக்கு மாற்றமான திரிப்புக்கள், தவறுகள் போன்றுதான் தென்படும். இது யதார்த்தம்.

    ஹலோ செங்கொடியார், உமது உளறல் கட்டுரையை பல முறை படித்துப் பாரும். உமக்கே விளங்கும் எங்கே தவறு உண்டென்பதை.

    உமது தவறுகளை பிம்பமாக மாற்றுவதனால், எனக்கென்ன இலாபம்?

    தவறு எப்போதும் தவறுதான்!

  8. ஐயா செங்கொடி,ரொம்ப கிண்டுரீங்களே….ஆனா,மேட்டர் தான் ஒன்னும் இல்ல….
    நபியவர்கள்(ஸல்) காலத்தில் தொகுக்க பட்ட குர் ஆன்.அது நபியவர்களால் தொகுக்கப்படவில்லை,
    அல்லது,தொகுக்கப்பட்டதையும் அவர்கள் சரி பார்க்கவில்லை.அவரது உற்ற தோழர்களான உமர்,அபூபக்கர்,உஸ்மான்,அலி(ரலி),அவர்களால் சரி பார்க்கப் பட்டது..
    ஏனென்ரால்,முஹம்மது (ஸல்) அவர்கள் உம்மி நபி,(எழுதப்படிக்க அறிந்தவர்களாக இருக்கவில்லை)என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி, இருக்கும் போது,நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குரிய,உற்ற தோழர்(உஸ்மான் (ரலி)அவர்கள்) தொகுத்த குர் ஆனை,முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை.
    ஒருவேலை நபியவர்கள் கைப்பட எழுதிய பிரதிகளை உஸ்மான்(ரலி) அவர்கள் எரித்து இருந்தால்,….அடடா அதை பாதுகாத்து வைத்தி இருந்திருக்கலாமே,என இப்போது கேள்வி எழுப்ப முடியும்…ஆனால் யாரோ ஒருவர் எழுதியது,அதை இன்று நான் எழுதினால் என்ன முக்கியத்துவமோ,அதே தான் அதற்கும்…மேலும் அதில் உள்ள இறைவார்த்தைக்குத்தான் மதிப்பே தவிர,அந்த எழுத்துக்கல்ல.அவர் தேவையற்ற குழப்பத்தை கலையவே அவ்வாறு செய்தார் என்பது முஸ்லிம்களாகிய நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்..
    அதனால,நீங்க தேவைஇல்லாம டென்ஷன் ஆகி ஒடம்ப கெடுத்துக்காதீங்க,செங்கொடி…

    நீங்க தூக்கிபிடித்து இருக்கும் கொடி,கிழிஞ்சு நாருதே,அத கொஞ்சம்,துவைத்து,தைத்து காயப்போடும் வழிய பாத்தீங்கன்னா,நல்லா இருக்கும்னு நெனக்கிறேன்…ஏன்னா போர போக்க பாத்தா,கொடி கோமனமாகிரும்போல,
    அசிங்கமா இருக்காது????…..
    என்ன சொல்ரீங்க?????

    நன்றி,
    ரஜின்

  9. நன்பரே நீங்கள் முழு குர்ஆணையும் வாசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அந்தவாசிப்பில் எதாவது ஒரு இடத்தில் இது இறைவனின் வார்த்தை இல்லை இந்த நூற்றாண்டுக்கு இது ஒத்துவராது என்று ஒரு வசனதையாவது உங்களால் காட்டமுடியுமா?

    அப்படி கான்பித்தால் அதர்கு உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் விளக்கம் அளிக்கதயாராக உள்ளோம்

  10. எப்படி வந்தது.. எங்கிருந்து வந்தது என்பதை விட. அதில் என்ன இருக்கிறது, மக்களுக்கும் மனிதர்களுக்கும் பயன்படுமா? என்றுதான் நோக்க வேண்டும். தேவையானவைகள் இருக்கட்டும் தேவை இல்லாதவைகளை அதைக் கொடுத்தவனே எடுத்துவிடுவான்,,, இறை நம்பிக்கை கொண்டவர்கள் அதை கடவுளின், அல்லாஹ்வின் செயாலாகா பார்பார்கள். குரானும் செரி, விவிலியமும் செரி, திருக்குறளும் செரி, எதுவானாலும்…. மக்களுக்கு பயன்படும் போது அதை படைத்தவனின் பயன் விளங்கும். படைத்தவன் ஆத்திகர்களுக்கு இறைவனாகவும், நாத்திகர்களுக்கு மனிதனாகவும் தெரிவான். படைப்பின் நோக்கம் ஒன்று தான்……… இது டாஸ் கபிடலுக்கும் பொருந்தும் தோழரே……

    http://wp.me/KkRf

  11. செங்கொடி, நீங்கள் கட்டுரைகள் எழுதுவதை பார்தால் இரண்டு வகையான பிரிக்கலாம்

    ஓன்று:
    யாரிடமோ பணம் வங்கி கொண்டு மதங்களை எதர்ப்பு செய்கின்றீர்கள் .

    இரண்டு:
    மனோ வியாதி
    வீட்டில், அம்மா, அப்பா, தங்கை அக்க, தம்பி எதோ பிரச்னை ..அல்லது மனைவி வழியாக …

    இப்படி மன நோயாள பதிக்க பட்ட நீங்கள் , எல்லாம் டேரிந்துபோலவும், ஆராச்சி செவது போலவும் கற்பனை பானஈ கொண்டு , இத்தெய் நோயால் பதிக்கப்பட்ட சில பேர்கள் எழுதிய கட்டுரைகளை படித்து அததை தமிழி மாற்றி எழுத்து உங்களின் ஆராச்சி போலவை கட்ட முயசுது உள்ளீர்கள்…உடனை டாக்டரி பொய் கோன்சுல்ட் பண்ண வில்லை எனில் , வியாதி முற்றி விடும் ..

    உங்கள் வீட்டில் எதோ தப்பு நடந்ததை பார்த்தால் ஏற்பட்ட விளைவு , அல்லது எதோ மதம் மூலமாக உங்களுக்கு பதிக்க பாடு உள்ளீர்கள்.. விரைவில் மனோ வியாதி டாக்டரை காணவும். அல்லது நல போக போக வியாதின் வீரியம் கூடி வேறு எதாவது ப்ரோப்லேம் வந்து விடும்.

  12. முதல் முதலில் உதுமான் காலத்தில் தொகுக்கப் பட்ட குரான் குயுஃபிக் அரபி எழுத்தில் எழுதப்பட்டது. அந்த குரானை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து இஸ்லாமிய நண்பர்களால் படிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
    இதனை பற்றி மேலும் எழுதுகிறேன்.

    http://www.archive.org/details/Al-mushaf-Al-Imam

  13. இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

    1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.
    அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் – அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி – அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் – தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை – மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.

    2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
    அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் – வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்களிடம் – வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே – அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் – நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு – தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.

    3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.
    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் – எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி – அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் – சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.

    4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
    அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் – எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் – சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

    மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை – நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது – அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து – தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் – எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.
    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் – அரபி மொழி அல்லாதவர்களும் – அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி – பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை – ஃபத்ஆ – தம்மா – கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் – ஸேர் – பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் – அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு – அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு – குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த – உமையாத் – காலத்தின் ஐந்தாவது கலீஃபா – மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.

    தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் ‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதுதல்’ என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.

    6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:
    அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:

    ‘நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.’ (அல்-குர்ஆன் 15 : 9)

    நன்றி -ஒற்றுமை

  14. சொன்னது உங்களுக்கு புரிந்து இருந்தால் விவாதியுங்கள்.

  15. ttp://www.answering-christianity.com/quran/quran_textual-reply.html

    இந்த ஆய்வுக்கு நாம் பதில் தருகிறோம். வரிக்கு வரி மொழி பெயர்த்தும் பி ஜே,இன்னொரு தமிழ் குரான் மொழி பெயர்ப்பும் அந்த இணையப் பக்கங்களில் சொல்லப் படும் குரான் வசனங்கள் சொல்வதை ஒத்து வருகிறதா என்று பார்ப்போம்..இதில் சொல்வதை அப்படியே மொழி பெயர்த்து தருகிறேன்.

    கட்டுரை ஆசிரியர் முகமதுவின் காலத்தில் குரான் முழுமையாக எழுதப் படவில்லை என்ற கிறித்தவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரும் விதமாகவே இக்கட்டுரை எழுதி உள்ளார்.

    மறுப்பிற்கு அவர் ஆதாரமாக கூறுவது.
    அ)குரான்
    ஆ)ஹதிது

    நாம் முதலில் அவர் முகமதுவின் காலத்தில் குரான் முழுமையாக எழுதி பாதுகாக்கப் பட்டது என்பதற்க்கான குரான் வசனங்கள்(கட்டுரை ஆசிரியர் கூறும்) வசனங்களையும் அதன் தமிழ் மொழி பெயர்ப்ப்பை மட்டும் பார்ப்போம்.

    இந்த குரான் வசனங்கள் கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கு ஏற்ப இருக்கிறதா எபதை நாம் இரு தமிழ் மொழி பெயர்ப்புகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

    //A large number of missionaries and the self-styled “critics” have been quoting Islamic traditions, or reports (Hadith), which support their claim, that the Qur’an was not written at the time of its Revelation. Are all these claims true? They are not, if we re-examine them.

    பல கிறித்தவ மத பிரச்சாரகர்களும்,நாத்திக கொள்கையுடைவர்களும் குரான் முகமது காலத்தில் எழுதப் படவில்லையென்றும் அதற்கு ஆதரங்கள் இஸ்லாமிய ஹதிதுகளிலும்,பிற நூல்களிலும் இருப்பதாக கூறுகின்றனர்.இவர்கள் கூறுவதை சரி பார்ப்போம்.//

    ___________________

    //Evidence from the Qur’an (குரானின் ஆதாரம்)

    The Qur’an itself contains many passages which refer to its written form. There appear to be four chapters (Sura’s) of the Qur’an which refer to the Qur’an’s written form explicitly. I’ll quote them:

    முகமதுவின் காலத்தில் குரானின் பல அத்தியாயங்கள் எழுதப்பட்டதாக இந்த(4) வசனங்கள் கூறுகின்றன.
    —————————-
    I)

    “By no means! Indeed it is a message of Instruction
    Therefore, whoever wills, should remember
    On leaves held in honour
    Exalted, purified
    In the hands of scribes
    Noble and pious”
    Sura’ 80: 11-16

    http://www.tamililquran.con

    80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
    80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
    80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
    80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
    80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
    80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்

    பி ஜேவின் மொழி பெயர்ப்பு

    80:11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
    12. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.
    13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப் பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடு களில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர் களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.26

    ____________________________________

    II)

    Here we have a reference to those scribes who wrote the Qur’an, on leaves. Minister Abdullah Yusuf Ali, in his commentary wrote that at the time of the Revelation of this Surah, forty-two or forty-five others (Surahs) had been written and were kept by Muslims in Makkah (out of the total 114 Surahs).

    “Nay, this is the glorious Qur’an, on a Tablet preserved”
    Sura’ 85: 21-22
    http://www.tamililquran.com

    85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

    85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் – பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

    பி ஜேவின் மொழி பெயர்ப்பு

    21. ஆம்! இது மகத்தான குர்ஆன்!
    22. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ளது.

    The above verse is the ultimate proof on the written preservation of the Qur’an even before the migration of Prophet Muhammad (pbuh).

    மேற்கூறிய வச்னமானது முகமதிவின் காலத்திலேயே குரான் எழுதி பாதுக்காக்கப் பட்டது என்பதற்கான ஆதாரமாகும்
    ______________________

    “This is a glorious Reading, In a book well-kept,Which none but the purified teach This is a Revelation from the Lord of the Worlds”Sura’ 56: 77-80.

    http://www.tamililquran.com

    56:77. நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

    56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

    56:79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

    56:80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

    பி ஜேவின் மொழி பெயர்ப்பு

    56: 77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.26
    79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.291
    80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

    The above verse refers to a “book well-kept,” which can be no other than the Qur’an.

    இந்த வசனம் கூறும் பாதுகாக்கப் பட்ட ஏடு என்பது குரானே ஆகும்

    _________________________

    “They said: Tales of the ancients which he had caused to be written and they are dictated to him morning and evening 25: 5

    http://www.tamililquran.com

    25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் – ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

    பி ஜேவின் மொழி பெயர்ப்பு

    25:5 இது முன்னோர்களின் கட்டுக் கதை. அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது’ எனவும் கூறுகின்றனர்

    முகமதின் எதிரிகள் அவர் பழைய கதைகளை வேறு விதமாக கூறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    A reference to the enemies of the Prophet Muhammad (pbuh) when they accused him of plagiarising and retelling stories from the past. Still, we see words referring to the Qur’an in its written form.

    //

    ______________________________

    கட்டுரையின் மற்றும் குரான் வசனங்களின் மொழி பெயர்ப்பை சரி பார்க்குமாறு நண்பர் முகமதுவை வேண்டுகிறேன்.
    பிறகு கட்டுரை சொவதையும் குரான் வசனங்கள் சொல்தையும் ஆராய்வோம்.
    (continued)

  16. குர்ஆன் மொழி பெயர்ப்புக்கள் மாறுபடலாம்,

    அரபு மூல ஏடு மாறுபடாது.

  17. இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள்: கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லா-மலேயே வாழ முடியும் என உறுதியா-னது. இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள், சுயமாக எதையும் செய்-யக் கூடாதவர்கள்; நீங்கள் சுதந்தர-மா-ன–வர் அல்ல; நரகம் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டிருப்பதால் நீங்கள் நல்ல-வராக நடிக்கிறீர்கள்; உங்களுக்கென்று நல்ல கோட்பாடுகளே கிடையாது.
    நாமே நமக்கு வழிகாட்டி: மனிதர்களாகிய நாம் நமக்கு நாமே வழி காட்டிகள்; நல்லவை, கெட்டவை அறியக்கூடியவர்கள்; நம் ஒழுக்கத்-திற்கு நாமே பொறுப்பானவர்கள் என்-கிற முடி-வுக்கு வந்தேன். மதங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுபவற்றை, எவ்விதமான கட்டுப்-பாடுகளுக்கும் விதிமுறை களுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல் – நம் விருப்பத்தை நசுக்காமல் – நாமும் நல்ல-வர்-களாக வாழ்ந்து பிறர்க்கும் நல்ல-வர்-களாக இருக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன்

  18. Posted on அக்டோபர்17, 2009 by செங்கொடி

    இரண்டு குரான் படிகள் /1.ரஷ்யாவின் தாஷ்கண்ட் /2.துருக்கியின் இஸ்தான்புல் /
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍——————————————————————————————————————-

    18:24.”Perhaps my Lord will guide me to what is nearer to this in wisdom.”
    ——————————————————————————————————————-
    சில/பல தனிம சேர்மம்யாவும் அழிய/சிதைய‌க்கூடியவையே. (மரப்பட்டை/தாள்/தோல்/எலும்பு/கல்/உலோகம்) இன்று பாதுகாக்கப்படுவதாக கதைக்கப்படும் மேற்கூறப்பட்ட படிகள் அனைத்தும் சிதையக்கூடியது என்பது அறிவியல்.

    15:9. and indeed it is We who will preserve it.

    Preservation through hard/soft copy.

    Injeel and Torah were not protected due to lack of technology.

    The Quran is transmitted to later generations as a guidance by science and technology.

    ——————————————————————————————————————–
    Finally

    17:93. or that you can ascend into the heavens. And we will not believe in your ascension unless you bring for us a record that we can study.

    quranist@aol.com

  19. naannaathigan, on மார்ச்23, 2011 at 12:06 மாலை said:
    ——————————————————————————

    1.இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள்

    அப்ப நீங்க இந்திய அடிமை!

    2.கடவுள் பற்றிய நம்பிக்கை இல்லாமலேயே வாழ முடியும்

    ஏற்கிறேன்.குரான் கடவுளை மறுக்கிறது.

    3.இசுலாத்தில் நீங்கள் அல்லாவின் அடிமைகள்,

    நீங்க மன்மோகன்சிங் அடிமையா ?

    4.சுயமாக எதையும் செய்யக் கூடாதவர்கள்;

    நீங்க விரும்பிய எதையும் சுயமாக யாருக்கும் கட்டுப்படாமலா செய்யுங்க‌ !

    5.நீங்கள் சுதந்தரமானவர் அல்ல;

    நீங்க பாஸ்போர்ட் இல்லாம வெளியேறமுடியாது.

    6.நரகம் பற்றிய அச்சம் ஊட்டப்பட்டிருப்பதால்

    தவறுக்கு தண்டனை என்பதால்தான் நீங்கள் தவறுவதில்லை.

    7.நீங்கள் நல்ல-வராக நடிக்கிறீர்கள்;

    அப்ப நீங்களுமா?

    8.உங்களுக்கென்று நல்ல கோட்பாடுகளே கிடையாது.

    குடிப்பது குட்டிபோடுவது கும்மாளாமிடுதல் போன்ற நல்ல கோட்பாடுகளே கிடையாது.

    9.நாமே நமக்கு வழிகாட்டி:

    இல்லை.

    10.மனிதர்களாகிய நாம் நமக்கு நாமே வழி காட்டிகள்;

    இல்லை.

    11.நல்லவை, கெட்டவை அறியக்கூடியவர்கள்;

    இல்லை.

    12.நம் ஒழுக்கத்திற்கு நாமே பொறுப்பானவர்கள்

    ஆம்.

    13.மதங்களின் நோக்கம் எனச் சொல்லப்படுபவற்றை, எவ்விதமான கட்டுப்-பாடுகளுக்கும் விதிமுறை களுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல்

    இந்தியச்சட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுக்கும் விதிமுறைகளுக்கும் பயந்து தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல் உங்க விருப்பம் போல வாழ்ந்து காட்டுங்கண்ணே.

    14.நாமும் நல்லவர்களாக வாழ்ந்து பிறர்க்கும் நல்லவர்களாக இருக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன்

    எது நல்லது எது கெட்டதுன்னு ஒங்க தனிவழியை கூறுங்க.

    quranist@aol.com

  20. //The Quran is transmitted to later generations as a guidance by science and technology.//
    நண்பர் குரானியவாதி நலமா?
    குரான் எப்படி பாதுகாக்கப் பட்டது(?) என்ற உங்கள் கருத்தை கூறுங்கள்.அதில் விவாதிப்போம்.

  21. Question:

    குரான் எப்படி பாதுகாக்கப்பட்டது ?
    SANKAR, on மே10, 2011 at 10:44 மாலை said:
    ———————————————————————————————————–
    Answer:

    27:30.By nature it’s abundant quality and quantity.

    “மற்ற புத்தகங்கள் இன்றும் காணக்கிடைப்பதுபோல‌”//The Quran is transmitted to later generations as a guidance by science and technology.//

    quranist@aol.com

  22. Quran allahvidamirundhu vandha vedham endrum muhammad sallallahu alaihi vasallam avarhal irudhi irai thoodhar enbadhai nambum muslimgalahiya nangal rasoolullah kooriya swargathukku uriyavarhal endru rasoolullah vaal munmoliyappatta usman raliyallahu anhu atthiyayangalaha aakki thohutha quran ai nambuhirom — nangal MUSLIM gal…

    nambuvadhu bol nadippavan MUNAFIQ…

    nambadhavan KAFIR…

    Nee namburiya illa nambaliya… enna dhan solla varra…

    NEE MUSLIMA, MUNAFIQA(NAYAVANJAHANA), KAFIR ah

    Harathula porandhavane sollu….

  23. அருமையான கட்டுரை. முஹம்மது காலத்தில் அரபி மொழி முழு வளர்ச்சி அடையாமல் இருந்தது. குறிப்பாக, அரபி எழுத்துக்கள்(alphabets) குறைவாக இருந்தன. சில சத்தங்களுக்கு(sounds) எழுத்துக்கள் இல்லாமல் இருந்தன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, முஹம்மது இறந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகே, சில அரபி வார்த்தைகளுக்கு புள்ளி வைத்து(dotting system) இந்த சத்தங்களுக்கு அரபி வடிவம் கொடுத்தனர். மேலும் முஹம்மது காலத்திற்கு பல நூற்றாண்டுகள் பிறகே அரபி இலக்கணம் வளர்ச்சி பெற்று முழுமை அடைந்தது. உண்மை இப்படி இருக்க, பிறகு எப்படி இன்றுள்ள குரான் முஹம்மது காலத்து அரபி குரானாக இருக்க முடியும்?

  24. صحيح مسلم
    عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ”

    ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் குடித்தால் மஹ்ரமியத் உண்டாகும்” என்று அல்குர்ஆனில் இருந்து, பின்பு “குறிப்பிட்ட ஐந்து தடவைகள் மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்பதைக் கொண்டு மாற்றப்பட்டது, அவைகள் அல்குர்ஆனில் ஓதப்படும் நிலையிலேயே நபிகளார் மரணித்தார்கள்.” (முஸ்லிம்:3670,3671)

    இந்த செய்தி நம்பகமான மிகப் பலமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதியப்பட்ட ஒரு செய்தியாகும்.
    ; இந்த செய்தி அல்குர்ஆனில் குறைவு இருக்கின்றது என்ற சந்தேகத்தை உருவாக்கிவிடும் என்பதாகும், ஏனெனில் நபிகளார் மரணிக்கும் போது அல்குர்ஆனில் இருந்த வசனம் தற்போது இல்லை, அதனை அல்குர்ஆனில் இருந்து நீக்கியது யார் என்பதே!

  25. நண்பர் அப்துல்லா,

    உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டு விட்டன. இந்தக் கட்டுரை குறித்து உங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது எப்படிப் பட்டதாக இருந்தாலும் வெளியிடப்படும். ஆனால் அவ்வாறன்றி வெறுமனே ஹதீஸ்களை பதிந்து செல்வது அனுமதிக்கப்படாது. மேலும் சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளீர்கள். உங்களது குப்பை விவாதங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் அதை உங்கள் கருத்தாக முன்வைத்தால் தக்க பதில் தரப்படும்.

    நன்றி.

  26. செங்கொடி அவர்களுக்கு உங்கள் பேச்சில் நைய்யாண்டி கேலி அகம்பாவம்தான் தெரிகிறது உங்களுக்கு குரானில் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அழகிய வார்தைகளை கொண்டு கோள்வி எழுப்புங்கள் உங்களை போன்றவர்கள் கோள்வி எழுப்பும் போதுதான் இறைவார்தையின் உண்மை இன்னும் அதிகம் விளங்குகிறது உங்களுக்கு குறை கூறும் நோக்கம் மட்டும்தான் உள்ளது நடுநிலையாக ஆராய்ந்து பார்க்கவில்லை முதலில் உங்கள் புரிதலை மேம்படுத்க் கொண்டு பிறகு கேள்வி கேளுங்கள்

  27. நண்பர் அப்துல்லா,
    நிச்சயமாக இல்லை. அழகிய சொற்களைக் கொண்டே கேள்வி எழுப்பி உள்ளேன். வாய்ப்பிருந்தால் பதில் கூறுங்கள்.

    மறுபக்கம் நானும் அதையே தான் கூறுகிறேன். \\ உங்களுக்கு குறை கூறும் நோக்கம் மட்டும்தான் உள்ளது நடுநிலையாக ஆராய்ந்து பார்க்கவில்லை முதலில் உங்கள் புரிதலை மேம்படுத்க் கொண்டு பிறகு // உங்கள் விமர்சனங்களை வைத்தால் அழகிய முறையில் பதில் கூறப்படும்.

  28. நான் சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்…

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்